நேவி சம்பத் விளக்க மறியல் தொடர்கிறது

முன்னாள் லெப்டினென் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, எதிர்வரும் செப்டம்பர் 12ம் திகதி வரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த அவர் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் நிதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.

இதனையடுத்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated: August 29, 2018 — 7:11 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *