கொழும்பில் நடைபெற்ற சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105ஆவது ஜனன தின நிகழ்வுகள் !!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான சௌமிய மூர்த்தி தொண்டமானின் 105ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கொழும்பு இ.தொ.கா. தலைமையகத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. காலி முகத்திடலிலுள்ள பழைய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இன்று காலை 7 மணியளவில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த கட்டட வளாகத்தில் உள்ள சௌமிய மூர்த்தி தொண்டமானின் சிலைக்கு ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம், மத்திய மற்றும் ஊவா மாகாண அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன் மற்றும் செந்தில் தொண்டமான் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமானின் குடும்ப அங்கத்தவர்கள் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தொடர்ந்து இ.தொ.காவின் தலைமையகமான செளமியபவனின் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளன.

Updated: August 30, 2018 — 10:08 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *