•நோ கொமன்ட்ஸ் ( NO COMMENTS)

படத்தில் இருப்பவர் கேரள முதலமைச்சர். அவர் தனக்கு தன் கையால குடை பிடிக்கிறார்.

அருகில் இன்னொரு படத்தில் இருப்பவர் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யா. அவருக்கு குடை பிடிக்கவென ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அதைப் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

அந்த உத்தியோகத்தருக்குரிய சம்பளமும் மக்களின் வரிப் பணத்தில்தான் வழங்கப்படுகிறது. அதைப் பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

ஏற்கனவே இரண்டு சொகுசு பங்களா வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு பெயிண்ட் அடிக்க விசேட பிரேரணை மூலம் 3 கோடி ரூபா வழங்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

தலா 5 கோடி ரூபா பெறுமதியான 6 சொகுசு வாகனம் வழங்கப்பட்டிருக்கிறது. அதைப்பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

30 பாதுகாப்பு பொலிஸ் வீரர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி கருத்து சொல்ல நான் விரும்பவில்லை.

இத்தனை வசதிகளையும் தனக்கு கேட்டுப் பெற்றவர் தமிழ் மக்களுக்காக இதுவரை செய்தது என்ன? வருடா வருடம் “அடுத்த வருடம் தீர்வு வருகிறது” என அறிக்கை விடுவது மட்டுமே!

குறிப்பு- இங்கு நான் கருத்து சொல்ல விரும்பவில்லை என எழுதியதற்கு காரணம் நான் கருத்து சொன்னால் சம்பந்தர் அய்யாவுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ ஆனால் அவரின் செம்புகளுக்கு என்மீது கோபம் வருகிறது. அப்ப நான் என்ன செய்ய?

நன்றி – Tholar Balan

Updated: August 31, 2018 — 3:47 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *