சமூக வலை­த்த­ளங்கள் சர்­வ­தேச ரீதியில் பாரிய சவா­லாக உள்­ளனர் ரணில்

தேசிய பாது­காப்பை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு பொரு­ளா­தார ஸ்திரத்­தன்மை அவ­சி­ய­மாகும். அத்­துடன் தேசிய பாது­காப்பை நிர்­ண­யிக்கும் முக்­கிய கார­ணி­யாக பொரு­ளா­தார வலு­நிலை உள்­ளது. நவீன தொழில்­நுட்­பத்தின் கார­ண­மாக ஏற்­படும் பாது­காப்புச் சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டிய அதே­வேளை, மீளப்­பு­துப்­பிக்­கத்­தக்க வளங்­களை செயற்­றி­ற­னாகப் பயன்­ப­டுத்தி, பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்த வேண்டும் என ஶ்ரீலங்கா பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

சர்­வ­தேச நாடு­களின் பங்­க­ளிப்­போடு 8ஆவது பாது­காப்பு செய­ல­மர்வு நேற்­றைய தினம் ஶ்ரீலங்கா தலைநகர் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது. இரு­நாட்கள் நடை­பெ­ற­வுள்ள இச்­செ­ய­ல­மர்வில் நேற்­றைய தொடக்க நிகழ்வில் கலந்­து­கொண்டு விசேட உரை­யாற்­றிய போதே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

பிர­தமர் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் குறிப்பிட்டதாவது:

‘மூன்று தசாப்­த­கால யுத்தம் 2009ஆம் ஆண்டில் முடி­வ­டைந்த பின்னர் முத­லா­வது பாது­காப்பு செய­ல­மர்வு 2011ஆம் ஆண்டில் நடை­பெற்­றது. அச்­செ­ய­ல­மர்வில் ஆரா­யப்­பட்ட விட­யங்கள் பய­ன­ளித்­ததைத் தொடர்ந்து குறித்த செய­ல­மர்வு இவ்­வ­ருடம் 8ஆவது தட­வை­யா­கவும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. எமது நாடு மாத்­தி­ர­மன்றி, செய­ல­மர்வில் கலந்­து­கொண்­டுள்ள அனைத்து நாடு­களும் சர்­வ­தேச பாது­காப்புத் தொடர்பில் அக்­கறை கொண்­டுள்­ளன.

பயங்­க­ர­வாதம், கால­நிலை மாற்றம், இயற்கை அனர்த்­தங்கள், ஆட்­க­டத்தல், அர­சியல் செயற்­பா­டுகள், பூகோ­ள­ம­ய­மாக்கல், பொரு­ளா­தா­ர­நிலை போன்ற பல்­வேறு கார­ணிகள் தேசிய மற்றும் சர்­வ­தேச பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லாக அமை­கின்­றன. இவற்றில் எல்­லைப்­ப­டுத்­தப்­ப­டாத பர­வ­ல­டையும் வன்­முறை குறிப்­பி­டத்­தக்க சவா­லாக உள்­ளது. சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் யார் வேண்­டு­மா­னாலும், எவ்­வ­கை­யான கருத்­தையும், குறு­கிய நேரத்தில் வெளி­யிடும் சந்­தர்ப்பம் உள்­ளது. இது பாரி­ய­தொரு சவா­லாகும்.

அதே­போன்று இணை­ய­வழி குற்­றங்கள் (சைபர் க்ரைம்) தற்­போது அதி­க­ரித்து வரு­கின்­றன. இணையம் மூலம் ஒரு­வ­ரு­டைய தனிப்­பட்ட தர­வு­களை திரு­டக்­கூ­டிய வாய்ப்­புக்கள் காணப்­ப­டு­கின்­றன. பாது­காப்­பிற்கு நேர­டி­யாக ஏற்­ப­டக்­கூ­டிய சவால்­களை விடவும், இவ்­வா­றான எதிர்­வு­கூற முடி­யாத மறை­முக அச்­சு­றுத்­தல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது கடி­ன­மாகும்.

தற்­போது தேசிய பாது­காப்பை நிர்­ண­யிக்கும் முக்­கிய கார­ணி­யாக பொரு­ளா­தாரம் மாற்­ற­ம­டைந்து வரு­கின்­றது. பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­படும் தளம்­பல்­நிலை மத்­தி­ய­தர மக்­களை வெகு­வாகப் பாதிக்கும். அவ்­வ­கையில் நாட்டின் பாது­காப்­பினை உறுதி செய்­வதில் பொரு­ளா­தார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்­தன்மை என்­பன இன்­றி­ய­மை­யா­த­ன­வாகும்.

கால­நி­லையில் ஏற்­படும் திடீர் மாற்­றங்கள் மற்றும் இயற்கை அனர்த்­தங்கள் தனி­ம­னி­தனை மாத்­தி­ர­மன்றி, பொரு­ளா­தா­ரத்தை நேர­டி­யாகப் பாதிக்­கின்­றன. தேசிய பாது­காப்பில் தாக்கம் செலுத்தும் முக்­கிய கார­ணி­யாக பொரு­ளா­தாரம் காணப்­படும் அதே­வேளை, பொரு­ளா­தா­ரத்தில் நேரடியான தாக்கம் செலுத்தும் மிக முக்கிய காரணியாக காலநிலை உள்ளது. திடீரென ஏற்படத்தக்க, எதிர்வுகூற முடியாத சவால்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் செயற்பட வேண்டும்

அத்தோடு மனிதனால் உருவாக்கப்பட்ட மற்றும் இயற்கையால் ஏற்படும் தேசிய, சர்வதேச பாதுகாப்பு சவால்களுக்கான தீர்வுகள் சர்வதேச மட்டத்திலான பாதுகாப்பு செயலமர்வின் மூலம் ஆராயப்படும்” என்றார்.

Updated: August 31, 2018 — 3:53 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *