மைத்திரியின் வருகையின் போது கடற்தொழிலாளர் சங்கத் தலைவரை அச்சுறுத்திய புலனாய்வுத்துறை

 

ஶ்ரீலங்கா ஜனாதிபதி மயிலிட்டிக்கு வரும் போது போராட்டம் செய்ய ஆயத்தமான போது கொழும்பில் இருந்து வந்த புலனாய்வு பிரிவினர் போராட்டம் செய்ய வேண்டாம் என்று அச்சுறுத்தியிருத்தியிருந்த தாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்க தலைவர் நாகராசா வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 22 ஆம் திகதி மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்திக்கா அடிக்கல்லை நாட்டுவதற்கா வருகை தந்திருந்தார்.

ஜனாதிபதியின் வருகையின் போது வெளிமாவட்ட மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்த கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் திடீரென குறித்த போராட்டம் கைவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் கருத்து கூறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாங்கள் ஜனநாயக ரீதியில் எங்கள் உரிமைகளுக்கா போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்திருந்தோம். எனினும் கொழும்பு மற்றும் காங்கேசந்துறையை சேர்ந்த புலனாய்வு பிரிவினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தனர்.

எங்களால் முன்னெடுக்கப்படவிருந்த போராட்டத்தின் தகவல்களையும் பெற்றுக்கொண்டு சென்றனர்.” என தெரிவித்தார். மேலும் தற்போதும் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத மீன்பிடி தொடர்கின்றது இதனால் எமது கடல் வளம் பாதிக்கப்படுகின்றது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கின்றது என தெரிவித்தார்.

Updated: August 31, 2018 — 3:56 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *