நித்தியகலாவின் கொலையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்

 

கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட முல்லைத்தீவு முறுகண்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த 32 அகவையுடைய கறுப்பையா நித்தியகலா என்ற பெண்ணின் படுகொலைக்கு நீதிகோரி முறுகண்டிப்பகுதியில் இன்று காலை பத்து மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது

முறுகண்டி மற்றும் இந்துபுரம் கிராம மட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று காலை பத்துமணிக்கு திருமுறுகண்டி பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையாக ஆரம்பித்த இந்த கண்டன ஆர்ப்பாட்ட பேரணியானது அன்று வித்தியா இன்று நித்தியகலாவா ஒன்று சேர்வோம் பெண்களை பாதுகாப்பதற்காக இருப்பவர்கள் இருந்திருந்தால் இவ்வாறு நடக்குமா போராடுவோம் போராடுவோம் நீதிக்காக போராடுவோம் காமுகர்களின் பசிக்கு பெண்கள் இரையா உள்ளிட்ட பல்வேறு வாசகங்களை எழுதிய பதாதைகளை தாங்கியவாறும் வேண்டும் வேண்டும் நீதி வேண்டும் குற்றவாளிகளை உடன் கைது செய் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியவாறும் a -9 வீதி வழியாக திருமுறுகண்டி பொதுநோக்கு மண்டபம் வரை சென்று அங்கு மகஜர் கையளிக்கப்பட்டதோடு கண்டன உரைகளும் இடம்பெற்றது

இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்களான து ரவிகரன் ஆ புவனேஸ்வரன் த குருகுலராஜா சு பசுபதிப்பிள்ளை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ பிறேமகாந்த் மற்றும் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரினை பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களிடமும் எதிர்க்கட்சி தலைவருக்கான மகஜரினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களிடமும் வடமாகாண முதலமைச்சர் அவர்களுக்கான மகஜரினை வடமாகாணசபை உறுப்பினர் து ரவிகரன் அவர்களிடமும் பொலிஸ்மா அதிபருக்கான மகஜரினை மாங்குளம் போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஸ்பகுமார அவர்களிடமும் கையளித்தனர்

Updated: August 31, 2018 — 4:01 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *