முல்லைத்தீவில் தொடரும் நில அபகரிப்பு.!

 

வட தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட நீராவியடி ஏற்றம் பகுதியில் அபிவிருத்தி குழு தீர்மானத்தையும் மீறி சகோதர மொழி பேசும் அதிகாரிகளால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட நில அளவீட்டு பணி மதகுருமார்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட நீராவியடி ஏற்றம் பகுதியில் இருந்த பிள்ளையார் ஆலய வளாகம் யுத்தம் முடிவடைந்து மீள்குடியேறியபோது பௌத்த மத துறவி ஒருவரால் அந்த இடத்தில் விகாரை அமைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது

இந்த இடத்தினை மீட்ப்பதற்காக மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தபோதும் குறித்த பகுதி தொல்பொருள் திணைக்களத்தால் தமது பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டது

இந்நிலையில் மக்கள் தொடர்ச்சியாக போராடிவரும் நிலையில் இந்த இடத்தினை கைப்பற்றும் முகமாக அண்மையில் குறித்த பகுதி நில அளவீட்டு பணிகள் நடத்த அதிகாரிகள் வருகை தந்தபோது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறித்த நில அளவீட்டை தடுத்து நிறுத்தி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் வரை அளவீட்டு பணிகளை மேற்கொள்ளவேண்டாமென தெரிவிக்கப்பட்டது

குறித்த போராட்ட இடத்தில் வருகைதந்த கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் நில அளவை திணைக்களத்துக்கு குறித்த விடயத்தை எழுத்துமூலம் அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்

இந்நிலையில் குறித்த பகுதியை பிரதேச செயலக அதிகாரிகளோ கிராம அலுவலரோ அழைக்கப்படாது இன்று (7) சகோதர மொழி பேசும் நிலஅளவையாளர் மற்றும் தொல்பொருள் திணைகள அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்து அளவீடு செய்வதனை அறிந்த கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் உறுப்பினர்கள் மத தலைவர்கள் மக்கள் அனைவருமாக சென்று குறித்த அளவீட்டு பணியினை தடுத்து நிறுத்தியுள்ளனர்

குறித்த அளவீட்டு பணியில் வழமையாக தமிழ் அதிகாரிகள் வருகைதரும் போதும் இன்று சகோதர மொழி பேசும் நிலஅளவையாளர் மற்றும் தொல்பொருள் திணைகள அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்து அளவிட்டமை அங்கு இருக்கின்ற பௌத்த துறவியுடன் இணைந்து தந்திரமாக எமது பகுதிகளை பறிக்க முற்படுவதாகவும் அபிவிருத்தி குழு தீர்மானத்தையும் மீறி பிரதேச செயலாளர் கடிதம் வழங்காது ஏன் அளவீடு செய்கின்றனர் என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

 

Updated: September 7, 2018 — 3:50 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *