இது 107 அரசியல் கைதிகளின் பிரச்சினை மட்டுமல்ல: அருட்தந்தை சக்திவேல்

“தமிழ் அரசியல் கைதிகள் முன்னெடுக்கும் போராட்டம் வெறுமனே 107 அரசியல் கைதிகளில் பிரச்சினை அல்ல, மாறாக அனைத்து தமிழ் மக்களின் பிரச்சினை. எனவே இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்” என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக தேசிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

அநுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் 8 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளிட்ட 107 அரசியல் கைதிகளையும் வெகுவிரைவிலேயே விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக தேசிய அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கையை முன்னிருந்தி நாளைய தினம் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு முன்பாகவும், நாளை மறுதினம் சனிக்கிழமை வவுனியா பேருந்து நிலையத்துக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்தது.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டுகருத்து வெளியிடுகையிலேயே அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அருட்தந்தை சக்திவேல் உள்ளிட்ட பிரதிநிதிகள் இதை வலியுறுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை சக்திவேல், “இது 107 அரசியல் கைதிகளில் பிரச்சினை அல்ல, மாறாக அனைத்து தமிழ் மக்களின் பிரச்சினையாகவே கருதப்படுகின்றது. எனவே இந்த போராட்டத்திற்கு அனைத்து மக்களும் ஆதரவு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated: September 20, 2018 — 1:48 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *