சரத் பொன்சேகா முல்லைத்தீவுக்கு விஜயம்.!

வட தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் வனஜீவராசிகள் திணைக்களம் தொடர்பான குறைபாடுகளை கேட்டறியும் நோக்குடன் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட  கலந்துரையாடலில் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா கலந்து கொண்டு மக்களது குறைகளை கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளையும் தெரிவித்திருந்தார்

இன்று காலை 10.30  மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில்  இடம்பெற்ற இந்த நிகழ்வில் வனஜீவராசிகள் அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா மீள்குடியேற்ற பிரதியமைச்சர் காதர் மஸ்தான் வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களினதும் பிரதேச செயலாளர்கள் பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்

இதன்போது மக்கள் மற்றும் அதிகாரிகளிடம் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் இந்த விடயங்கள் தொடர்பில் எடுக்கவுள்ள நடவடிக்கை தொடர்பில் தெளிவு படுத்தினார்.

Updated: September 23, 2018 — 8:54 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *