சுமந்திரனின் சூழ்ச்சி!

 தியாக தீபம் திலீபன் மகாத்மா காந்தியின் பாதையிலேயே போராடினார், குறித்த நினைவு தூபி அமைந்துள்ள இடம் யாழ்.மாநகர சபைக்கு சொந்தமானது என சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தது உள்நோக்கம் கொண்டது என பலரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சுமந்திரனின் இந்த விவாதத்தின் படி தமிழீழ விடுதலை புலி உறுப்பினகள் அதாவாது ஆயுதம் ஏந்தி இந்த மண்ணுக்காக மடிந்த போராளிகளை நினைவு கூற முடியாதா? என்ற கேள்வி வலுப்பெற்றுள்ளது. இது தவிர குறித்த தூபி அமைந்துள்ள காணி யாழ்.மாநகர சபைக்குரியது என சுமந்திரன் கூறியதன் மூலம், குறித்த நினைவு தினத்தை மாநகர சபை தவிர்ந்த ஏனைய கட்சிகள் பொது அமைப்புக்கள் நடாத்த முடியாதா? அல்லது திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முடியாதா என்ற கேள்வியையும் ஏற்படுத்துகின்றது.

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையகத்தின் அறிக்கையின் பிரகாரம் நினைவு கூறல் என்பது தமிழ் மக்களுக்கு அவசியமானது எனவும், அது புலிகள் அமைப்பில் இருந்தவர்களையும் நினைவு கூற அவர்களுக்கு உரிமை உண்டு என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இன்றைய வழக்கில் இதனை சுமந்திரன் எடுத்து காட்டாமல், தனிய புலிகளையும் திலீபனையும் வேறுபடுத்தி காட்டி இந்த அனுமதியை பெற்றுள்ளார். அதாவது புலிகள் அமைப்பிலிருந்து திலீபன் வேறுபட்டு அகிம்சை ரீதியாக போராடினார் என்றே சுமந்திரன் நீதிமன்றில் கூறியிருந்தார்.

இதன் மூலம் ஆயுதம் ஏந்தி போராடிய புலிகளை நினைவு கூறுவதற்கு இனிவரும் காலங்களில் இந்தவலக்கை உதாரணமாக காட்டி குழப்பங்களை ஏற்படுத்த வாய்ப்புண்டு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் பொது நலன்கள் தொடர்பில் அவதானிப்பதற்காக மன்றில் தோன்றியிருந்த சட்டத்தரணிகளானகு.குருபரன், வி. மணிவண்ணன் கே.சுகாஸ், காண்டீபன் ஆகியோர் சர்ப்பனங்களை முன்வைப்பதற்கு சிறிலங்கா காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தமையும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated: September 25, 2018 — 5:06 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *