மகசீன் சிறைச்சாலையில் இருந்து அனந்தி சசிதரன் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் தகவல் !!

நீதிக்கான நடைப்பயணம் புளியங்குளத்தை கடக்கும்போது மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் நடைபயணம் செய்யும் மாணவர்களிடம் மகசீன் சிறையில் போராட்டம் தொடர்ந்தவண்ணமேயுள்ளது நீதிக்கான நடைப்பயணம் இடை நிறுத்த வேண்டாம் அப்படி ஏதாவது தகவல் வந்தால் அது பொய்என்று நினைக்கட்டாம் என மகஷின் சிறையில் கைதிகள் சொன்னதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் நடக்க முடியாமல் இருப்பதாகவும் அவர்களில் ஒரு சிலரை கைத்தாங்கலாக கூட்டி கொண்டு வந்ததாகவும் மற்றவர்கள் நடமாட முடியாமல் படுக்கையில் இருப்பதாகவும் ஆனந்தி சசிதரன் மிகவும் வேதனையோடு தெரிவித்தார்..

Updated: October 11, 2018 — 12:09 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *