பல்கலை மாணவர்களை அச்சுறுத்தியவர்கள் பொலிசாரா ?? சிங்கள அரசின் திட்டமிட்ட செயல் !!

நடைபயணமாக சென்ற யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று முந்தினம் அனுராதபுரம் சிறைச் சாலைக் கைதிகளை பார்வையிடச் சென்றபோது அங்கு குழுமிய சிங்களவர்கள் கடும் இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துமுகமாக பேசியிருந்தனர்.

குறிப்பாக சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் நிற்கத்தக்கதாகவே இந்த இனவாதக் கருத்துக்கள் மாணவர்களை நோக்கி கூறப்பட்டமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

அரசியல் கைதிகள் என்றபெயரில் சிறைச் சாலைக்குள் இருப்பவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும் அவர்களை விடுவிக்கக்கூடாதென்றும் பல்வேறுபட்ட இனவாதக் கருத்துக்கள் கூறப்பட்டன.

மாணவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் அவர்களை அசுறுத்துமுகமாக செயற்பட்டனர். இதன்போது ஸ்தலத்தில் நின்ற சில அரசியல்வாதிகள் ஏதும் பேசாமல் இருந்ததாகவும், அப்போது வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளர்கள் சிலரே மாணவர்களது கோரிக்கையின் நியாயத்தன்மையை சிங்களத்தில் அவர்களுக்கு விளங்கப்படுத்தியதாகவும் நேரில் நின்றவர்களால் கூறப்படுள்ளது.

இந்த நிலையில் மாணவர்களது போராடத்தில் கலந்துகொள்வதாகக் கூறி அவர்களது போராட்ட நியாயத்தன்மையை சிங்களவர்களுக்கு எடுத்துக்கூறுமளவுக்கு அவ்விடத்தில் நின்ற தமிழ்த் தரப்பைச் சார்ந்தோரால் முடியாமற்போனதுடன் ஒதுங்கி நின்றமை வேதனைக்குரிய விடயம் என பலரும் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், மாணவர்களை எச்சரித்து இனத்துவச வார்த்தைகளை பேசியவர்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் சில கிடைக்கப்பெற்றுள்ளன.

இவர்கள் சம்பவ தினம் அன்று மதுபோதையில் விருந்து கொண்டாட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் அனுராதபுரம் பொலிஸ் அதிகாரி எனவும் இன்னொருவர் பொலிஸ் உளவு பிரிவை சேர்ந்தவர் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கலில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.

Updated: October 16, 2018 — 9:18 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *