மன்னார் சதொச வளாகத்தில் இதுவரை 207 மனித எலும்புக்கூடுகள் : எண்ணிக்கை தொடருமா.?

வட தமிழீழம் மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணியில் இதுவரை 207 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் இன்று (திங்கட்கிழமை) 96 ஆவது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழும் பணிகள் இடம்பெற்றன.

தற்போது வரைக்கும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 207 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த எலும்புக் கூடுகளில் இதுவரை 199 முழுமையான எலும்புக்கூடுகள் மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் நீதவான் ரி.சரவணராஜா மேற்பார்வையில் சட்டவைத்திய நிபுணர் டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ்சோம தேவா இணைந்த கொண்ட குழுவினர் குறித்த அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக ஆஜராகி அகழ்வுப் பணியினை கண்காணித்து வரும் சிரேஸ்ட சட்டத்தரணிகள் நேற்று இந்த அகழ்வுப் பணிகளை கண்காணித்ததுடன், இதன் நிலமைகளையும் இதற்கு பொறுப்பாக இருக்கும் சட்டவைத்திய அதிகாரியிடம் கேட்டறிந்து கொண்டதாகத் தெரிய வருகின்றது.

Updated: October 30, 2018 — 11:23 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *