அலரி மாளிகைக்குள் தற்போது நடப்பது என்ன ? வெளியான பகீர் காட்சிகள் !!

 

இலங்கை பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அரச சின்னமாக உள்ள அலரி மாளிகை தலைகீழாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அலரி மாளிகையில் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் தங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் தங்கியிருக்கும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளன. அரச மாளிகை மிகவும் அசுத்தமான நிலையில்காணப்படுவதுடன், பல இடங்களில் குப்பைகளும் கொட்டப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டின் அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றும் இல்லத்தில், சிலர் கும்பலாக இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக இணையத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

Updated: October 31, 2018 — 3:24 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *