வட்டுவாகலில் வலை வீசிய தொல் திருமாவளவன்!

தாயகத்தின் வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட தமிழகத்தின் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இன்று 11.11.18 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற அவர் முதலில் முள்ளிவாய்க்கால் ஊடாக வட்டுவாகல் பாலத்திற்கு சென்று அங்கு வீச்சு வலைஊடாக மீன்பிடிக்கும் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களை பார்த்துள்ளதுடன் வீச்சு வலையினை வாங்கி தானும் வீசியுள்ளார்.

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு சென்று அங்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளதுடன் தங்கு தங்கியுள்ள ஒரு குடும்பத்தின் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்துள்ளது தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் போரி உயிரிழந்தவர்கள் நினைவாக கட்டப்பட்ட சிற்பத்தினை பார்வையிட்டு சென்றுள்ளார்.

 

 

Updated: November 11, 2018 — 8:22 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *