கத்தியுடன் அவைக்குள் நுழைந்த ரணில் விசுவாசி!குப்பைக் கூடையால் சபாநாயகரை தாக்கிய மஹிந்தவாதி!

சிறிலங்கா நடாளுமன்றில் இன்றைய தினம்மஹிந்த – மைத்ரி அணியினரிடையேஇடம்பெற்ற கை கலப்பிற்கு மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய மீது குப்பைத் தொட்டித் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது.

மஹிந்தவாதியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கம்பஹாமாவட்ட நாடாளுமன்ற இந்திக்க அநுருத்த ஹேரத் அருகிலிருந்த பகுப்பைக் கூடையை எடுத்துசபாநாயகரை நோக்கி எறிந்தார்.

இந்த குப்பைக் கூடை சபாநாகருக்கு முன்னால் விழுந்த நிலையில்அருகிலிருந்த நாடாளுமன்ற பணியாளர் அதனை பிடித்தார்.

திடீரென எறியப்பட்ட குப்பைக் கூடையை கண்டு அதிர்ச்சியடைந்தநிலையில் சபாநாயர் சற்று விலகிக்கொண்டதால் சபாநாயகரின் மேசையில் குப்பைக் கூடைவிழுந்தது. இதனால் எந்தவொரு காயமும் இன்றி சபாநாகர் தெய்வாதீனமாக தப்பியிருக்கின்றார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்றைய தினம் கூடிய போது பிரதமராகநியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச பிரதமருக்கான ஆசனத்தில் இருந்தவாறு விசேட உரையொன்றைஆற்ற முற்பட்டார் இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்காதுகடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால் மஹிந்த – ரணில் அணியினரிடையே குழப்பம் வெடித்தது.இதனிடையே மஹிந்தவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்கெடுப்பைநடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லசபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மஹிந்தவின் விசுவாசிகள் சபாநாயரைசூழ்ந்துகொண்டு அவரைத் தாக்க முற்பட்டனர்.

இதன்போது சபாநாயகரை தாக்குதவதற்காக அவரது ஆசனத்திற்குஅருகில் சென்றவர் முன்னாள் துணை சபாநாயகரான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின்நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.இதனையடுத்தே மஹிந்தவாதிகள் சபாநாயகரை முற்றுகையிட்டனர்.

இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றஉறுப்பினர்கள் சபாநாயகரை பாதுகாப்பதற்காக அவரது ஆசனத்தை நோக்கி படையெடுத்தனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் மூண்டது. சண்டியர்களைப் போல் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளானநாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் கட்டி பிடித்துக்கொண்டு கைகலப்பில்ஈடுபட்டனர்.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்டநாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும கையில் கத்தியுடன் மஹிந்தவாதிகளை தாக்கமுற்பட்டார். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பதையும்காண முடிந்தது.

கையில் கத்தியுடன் பாலித்த தெவரப்பெரும நாடாளுமன்ற அவைக்கள்காணப்பட்ட நிழல் படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்த நிழல் படங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றஅடிதடி தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.இதற்கு தமது கருத்துக்களை பதிவிட்டுவரும் சமூக வலைப்பதிவாளர்கள் கடும்எதிர்ப்பையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய நாடாளுமன்றஉறுப்பினர்கள் ரவுடிகளைப் போல் நடந்துகொள்வதாகவும், ரவுடிகளையும், ஊழல் மோசடிக் காரர்களையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால் இவ்வாறானசம்பவங்களைத் தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும் என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

அதேவேளை நாடாளுமன்றம் இந்த அளவிற்கு அராஜகமாகிள்ளதற்குசிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சர்வாதிகார போக்கும், மஹிந்தராஜபக்சவிற்கு இருக்கும் அதிகார வெறியுமே காரணம் என்று ஒரு தரப்பும், மற்றுமொரு தரப்பு அதிகாரத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லாத ரணிலுமேஎன்றும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Updated: November 15, 2018 — 6:13 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *