தீர்வு இன்றேல் முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் தீவிரமடையும் !!

 

வடதமிழீழம், முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்­ட­விரோத தொழில் நட­வ­டிக்­கை­கள் நிறுத்­தப்­ப­டா­து­ விட்­டால் இன்­னும் அதி­க­மாக மக்­கள் திரண்டு பெரி­ய­போ­ராட்­டங்­களை நடத்த வேண்­டி­வ­ரும் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து. ரவி­க­ரன் எச்­ச­ரித்­தார்.

முல்­லைத்­தீவு கடற்­தொ­ழி­லா­ளர்­கள் தடை­செய்­யப்­பட்ட தொழில் நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்­புத் தெரி­வித்து நேற்று ஒன்­ப­தா­வது நாளா­க­வும் தொடர்ச்­சி­யான கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­த­னர். போராட்­டத்­துக்கு புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள் சென்று ஆத­ர­வைத் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் து. ரவி­க­ர­னும் அந்­தப் போராட்­டத்­தில் கலந்து கொண்­டி­ருந்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது

முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளின் போராட்­டத்­துக்­குப் பலர் ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­றார்­கள். போராட்­டம் நியா­ய­மா­னது. விடு­த­லைப் பு­லி­க­ளு­டைய காலத்­தில் அவர்­க­ளுக்கு நிதித்­தட்­டுப்­பாடு இருந்­த­தா­கச் சொல்­லு­கின்­றார்­கள் அந்த நேரத்­தில் கூட பு­லி­கள் இந்­தப் பிர­தே­சங்­க­ளில் மரங்­கள் தறிக்­க­வில்லை, காடு­களை அழிக்­கவில்லை, கனி­ய­வ­ளங்­களைச் சூறை­யா­ட வில்லை, கடல்­வ­ளம் பாது­காக்­கப்­பட்­டது.

அவர்­கள் நினைத்­தி­ருந்­தால் தடை­செய்­யப்­பட்ட தொழில் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருப்­பார்­கள். ஆனால் அவர்­கள் அவ்­வாறு செய்­ய­வில்லை. உண்­மை­யான ஆட்­சியை நடத்­தி­னார்­கள் அத­னால்த்­தான் மீன­வர்­கள் கடற்­தொ­ழிலை நம்பி தாரா­ள­மா­கத் தொழிலை மேம்­ப­டுத்தி வாழ்­வா­தா­ரத்­தைப் போக்­கி­னார்­கள். ஆனால் இன்று சட்­டம், ஒழுங்­கைப் பாது­காக்­கி­­றோம் என்று சொல்­லிக்­கொண்டு சட்­ட­வி­ரோத தொழில்­க­ளுக்கு அனு­ம­தி­க­ளைக் கொடுத்­துள்­ளார்­கள்.

கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளின் தொழில் நட­வ­டிக்­கைக்­கா­கச் சட்­டம் ஒழுங்கு பாது­காக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தைத்­தான் நாங்­கள் கேட்­கின்­றோம். முல்­லைத்­தீவில் கடற்­றொ­ழி­லா­ளர்­கள் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்ற நிலை­யில் நாள்­தோ­றும் மாலை வேளை­யில் பல நூற்­றுக்­க­ணக்­கான பட­கு­கள் வெளிச்­சம் பாச்சி மீன்­பி­டிக்­கும் கரு­வி­கள் கொண்டு திரு­கோ­ண­ம­லைக் கடல்­ப­கத்­தி­லி­ருந்து வட­ம­ராட்சி கிழக்கு, முல்­லைத்­தீ­வுப் பகு­தி­க­ளுக்கு வரு­வதை மீன­வர்­கள் அவ­தா­னித்­துள்­ள­னர். இவர்­க­ளின் அத்து மீறிய இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த சம்­மந்­தப்­பட்ட தரப்பு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்– என்­றார்

Updated: August 11, 2018 — 4:16 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *