தமிழர்களின் முயற்சியில் கைதாகிறார் இனப்படுகொலையாளி..!!

பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களின் முயற்சியில் பிரித்தானிய தமிழர்கள் மீது கழுத்தை அறுப்பது போன்று சைகை காட்டி கொலை மிரட்டல் விட்ட சிறிலங்கா இனப்படுகொலை பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ குற்றவாளியென இன்று வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள ஶ்ரீலஙகா தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கழுத்தை அறுப்பதைபோன்று பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை காட்டியமை தொடர்பில் அவர் மீது புலம்பெயர் தமிழர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில் பிரியங்கபெர்ணான்டோவை கைது செய்வதற்கு பிடியானை பிறப்பித்துள்ளது வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம்.

Updated: January 22, 2019 — 6:20 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *