தமிழர் வரலாற்றில் பெப்ரவரி மாதம்.!

தமிழர் வரலாற்றில் பெப்ரவரி மாதம்.!

சிங்களம் மட்டும் சட்டம் 
மூத்த  சிங்கள  இனவாதியான  எஸ்.டபிள்யு .ஆர்.டி. பண்டாரநாயக்காவினால் சிறீலங்காப் பாராளுமன்றத்தில் சிங்களம் மட்டும்   சட்டம் 08.02.1956 அன்று கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தால் இலங்கைத்தீவில் தமிழ் இரண்டாம்பட்ச மொழியாக்கப்பட்டது 
தியாகி திருமலை நடராஜன் நினைவு நாள் 
04.02.1957அன்று சிங்ளச்சிறீ சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்கா வின் சுதந்திரதினத்தை தமிழர்கள் பகிஸ் கரித்தனர். திருமலையில் சிங்கக்கொடியை ! அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற 22 வயது நிரம்பிய இளைஞனான திருமலை நடராஜன்  கொல்லப்பட்டான் இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய தியாகி நடராஜன், எவ்.ஜி.மனுவல். டீ. சில்வா என்ற சிங்களக் காடையால் கோழைத்தனமான முறையில் சுடப்பட்டான்
சிறீலங்கா அடக்குமுறை காவலர்கள்  மீதான முதல் தாக்குதல் 
14.02.1977 அன்று காங்கேசதுறை மாவிட்டபுரப் பகுதியில் சிறீலங்காப் புலனாய் வவுப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோத் தர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தாக்கு தலில் கொல்லப்பட்டார்
சிறீலங்காவின் காவல்துறைப் பரிசோதகர் கொல்லப்பட்டார்
தமிழின அழிப்பில் முன்னின்ற பருத்தித் துறை காவல்நிலையப் பொறுப்பதிகாரியான பரிசோதகர் விஜயவர்தனாவும் அவரது சாரதியும் விடுதலைப் புலிகளால் 18.02.1983 அன்று சுட்டுக்கொல்லப்பட்டனர் 
குருநகர் இராணுவ முகாம் தகர்ப்பு 
பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்களின் வதை முகாமாக விளங்கியதும் இனவாத சிறீலங்கா இராணுவத்தின் பிராந்தியக் காரியாலயமாக விளங்கியதுமான குருநகர் இராணுவ முகாம் கட்டிடங்கள் விடுதலைப் புலி களால் 24.02.1984 அன்று வெடிவைத்துத்தகர்க்கப்பட்டன. 
கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல்
13.02.1985 அன்று கொக்கிளாய் சிறீலங்கா இராணுவ முகாம் மீது விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலே தமிழீழ விடுதலை வரலாற்றில் முதலாவது இராணுவ முகாம் தகர்ப்பு முயற்சி ஆகும். இத் தாக்குதல் 5 மணித்தியாலங்கள் நீடித்தது இத்தாக்குதலில் நூற்றிற்கு மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், (முப்ப திற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இதே வேளை நாயாற்று முகாமிலிருந்து உதவிக்கு வந்த இராணுவத் தொடரணி மீது மேற் கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலின்  போது 30 இராணுவத்தினர்  கொல்லப் பட்டனர், இத்தாக்குதல் நடவடிக்கையின் விளைவாக சிறீலங்கா இராணுவம் திரியாய், கொக்கிளாய் பகுதிகளிலிருந்து பின்வாங்கி பதவியாவில் நிலைகொண்டது ம்பன்குளப் படுகொலை தென்தமிழீழத்தின் உடும்பன்குள பகுதியில் வயல் வேலை செய்துகொண்டி ருந்த 60 தமிழர்கள் சிறீலங்கா அதிரடிப் படையினரால் சுட் டுகமேகாலலLLLடடு வைக் கோலுக்குள் வைத்து எரியூட்டப்பட்டனர் சம்பவம் 19.02.1986 அன்று இடம்பெற்றது.
லெப்.கேணல் பொன்னம்மான் வீரச்சாவு 
விடுதலைப் புலிகளின் மத்திய குழு உறுப்பினரும்  மூத்த தளபதியுமான லெப்.கேணல் பொன்னம்மான் 14.02.1987 அன்று கைதடியில் இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். ஆயிரக்கணக்கான புலிவீரர் களை உருவாக்கிய பயிற்சி முகாம்களுக்கு பொறுப்பாளராகவும், இராணுவத் தொழில் நுட்பப் பிரிவில் பலசாதனைகளையும் இவர்  படைத்தார். இவருடன் மேஜர் கேடில்ஸ் உட்பட 7 போராளிகள் வீரச்சாவடைந்தார்கள் 
வன்னிவிக்கிரம முறியடிப்பும் உலங்குவானுார்தி தகர்ப்பும்
வட தமிழீழம் வவுனியா பூவரசங்குள வழியாக வன்னி விக்கிரம என்ற குறியீட்டுப் பெயருடன் முன் னேற முற்பட்ட சிறீலங்கா இராணுவம் வந்த வழியே திருப்பி அனுப்பப்பட்டது. இதன் போது 10.02.1991 அன்று உலங்குவானுார்தி ஒன்று விடுதலைப் லிகளின் விமான புப் படையணிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது
 
மீனவர் படுகொலை 
18.02.1994 அன்று வட தமிழீழம் முல்லை பூனைத் தொடுவாய் கடற்பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாககுதலில் 10 மீனவர்கள் கொல்லப்பட்டர் 
 
கிளிநொச்சியின் மையப்பகுதி மீட்பு
கிளிநொச்சியூடாக யாழ் குடாநாடடி லிருந்து பேரூந்தில் சுதந்திரதினைத்திற்கு தமிழர் களைக் கண்டிக்குக் கொண்டு வருவேன் எனச் சபதம் செய்த ரத்வத்தையின் பேராசை 01.02.1998 அன்று கிளிநொச்சியின் மையப் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப் பட்டதையடுத்து நிராசையானது. அதன் போது  விடுதலைப் புலிகளால் 5 கி.மீ நீள நகரப்பகுதி  மீட்கப்பட்டது அத் துடன் பலநுாற்றுக்கணக்கான முன்னணி சிங்களப் படையினர்   கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கா இராணுவத்தினர் காயமடைந்தார்கள் 
 
லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு வீரச்சாவு
சுனாமியால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தில் மீள்கட்டுமான பணிகள் மேற்கொண்டவேளை 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மட்டு – அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன், மேஜர் புகழன், மேஜர் செந்தமிழன், 2ம் லெப்.விதிமாறன் ஆகிய போராளிகள்  வீரச்சாவடைந்தார்கள்
 
நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி.!
ஒரு பெரும் ஊடகச் சமராடியை  12.02.2009 நாம்  இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை  ஊடகம் வழியாக , உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
ஈகப்பேரொளி முருகதாசன்

தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து இலண்டனில் வசித்து வந்தவர்.

அகவை 27 உடைய முருகதாசன் சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் அவையின் முன்றலின் முன்பாக 2009, பெப்ரவரி 12 வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார்.

இவர், 7 பக்கங்களுக்கு “உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்

அன்னை பார்வதியம்மாநினைவு நாள் 

80 வயதான அன்னை பார்வதியம்மா உடல்நிலை சுகையீனமற்ற நேரத்திலும் சிங்களமும் – பாரதத்தின் ஆதிக்க அகங்காரத்தினாலும் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படாமல் இழுபரிகளினால் பல சொல்லனா துயர்களுக்கு மத்தியில் 20.02.2011 அன்று இயற்கை எய்தினார்.

தமிழின விடுதலைப் போரட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து அருளிய அன்னையை உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் அனைவர் நெஞ்சமதில் என்றும் நிங்கா நினைவுகளாய் நிலைத்தவரே சீரம் தாழ்த்தி வணங்குகிறோம் .

வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன்வீரச்சாவு

சிறிலங்காவின் தலைநகரில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று மேற்கொள்ளப்பட்ட வான்கரும்புலி வெற்றிகரத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆகிய வான்கரும்புலி மறவர்கள் வீரச்சாவடைந்தார்கள்

Updated: February 1, 2019 — 8:04 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *