மாவீரன் சேரன் அண்ணா அவர்களின் இறுதி வீர வணக்க நிகழ்வு பற்றிய அறிவித்தல் !!

மாவீரன் சேரன் அண்ணா அவர்களின் இறுதி வீர வணக்க நிகழ்வு பற்றிய அறிவித்தல் !!

( நாளை ஞாயிற்றுக்கிழமை 03.02.18 காலை 8 மணிக்கு )

தளபதிகளில் ஒருவர் மாவீரன் சேரன் அண்ணா 21.01.2019 அன்று பிரித்தானியாவில் சுகயீனம் காரணமாக சாவடைந்தார். இவரது இறுதி வீர வணக்க நிகழ்வுகள் Oxford இல் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபத்தில், 03.02.2019 காலை 8.00 மணிக்கு சகல மரியாதைகளுடனும் நடைபெறவுள்ளது.

தகனக் கிரியைகள் அருகில் உள்ள Banbury – Oxford (OX16 1ST) Crematorium இல் காலை 11.00க்கு நடைபெறும்.

எமது தாயக விடுதலை போராட்டத்தில் அளப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரன், தேசிய தலைவரின் பாராட்டையும், பரிசும் பெற்ற தளபதி இன்று மீளாத்துயில் கொள்கின்றான். எமது உயிரினும் மேலான உறவுகளே! சேரனுடன் இணைந்து களமாடிய போராளிகளே! இவ் இறுதி வணக்க நிகழ்வில் ஈகைச் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தி

” மாவீரன் சேரனை வழியனுப்ப அனைவரும் அணிதிரள்வீர்”

நன்றி.

நிர்வாகம்
தமிழீழ மாவீரர் பணிமனை
ஐக்கிய இராச்சியம்.
07737 204225

வணக்க நிகழ்வு நடைபெறும் இடம் : உலகத் தமிழர் வரலாற்று மையம்.

03.02.2019
8.00am Sunday
Mill Farm
Mill lean
Banbury
OX17 3NX

இறுதி கிரியை நடைபெறும் இடம் :

03.02.2019
11.00am
Sunday
Banbury Crematorium
Southam Road
Banbury
OX16 1ST

மேலதிகத் தகவலுக்கும்
தொடர்புகளுக்கும்.
வினோதன்: ‭
07482 552452‬
வசி:‭
07465 814848

புலனாய்வுப் பிரிவுப் போராளி சேரன் அவர்கள் லண்டனில் சுகவீனம் காரணமாக 21-01-2019 அன்று காலமானார். பல களங்களை கண்டு சமராடிய புலனாய்வு போராளி சேரன் தேசியத்தின் விடிவிற்கு அயராது உறுதியோடு பயணித்த போராளி.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல வியத்தகு சாதனைகளை புரிந்து வெற்றிகளுக்கு காரணமாக இருந்தவர் “சேரன்”

களமுனை கதை பேசும் பல விழுப் புண்களையும், உடல் உபாதைகளையும் சுமந்தவனாக எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி சாதாரண வாழ்க்கையை வாழ்ந்துவந்த “சேரன்” அவர்களுக்கு திடீர் சுகஜீனம் காரணமாக சுவுண்டன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப் பட்டார்.

அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை 30 மணித்தியாலங்களுக்கும் மேலாக இடம்பெற்று பின்னர் அதி தீவிர சிகிச்சைக்காக கேம்பிறிட்ஜ் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல தயாரான வேளையில் திடீரென அனைவரையும் சோகத்தில் ஆழ்தி இற்கை சாவைத் தழுவிக்கொண்டார்.

இன்று அதிகாலையில் இடம்பெற்ற இச் சோக நிகழ்வு போராளிகளை மட்டுமன்றி அவரை நன்கு அறிந்த அனைவரையும் சொல்லொனா துயருக்குள் ஆழ்தியுள்ளது.

யாழ்ப்பாணம் – கரைநாகரை சேர்ந்த “சேரன்” அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த நாள் முதல் பாசறை முதல் கொண்டு சண்டைக் களங்கள் என அனைத்திலும் தனக்கென முத்திரை பதித்தவர்.

எதற்கும் அஞ்சா அவரது உறுதியும், சண்டைக் களங்களை கையாண்ட விதம், எந்த வேலையையும் அவர் செய்து முடிக்கும் சாமர்த்தியம், இரகசிய காப்பு என்பன அவரை தனியாக இனம் காட்டியது.

அவரது கடின உழைப்பு, பயிற்சி, என்பவற்றினூடாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் பல சாதனைகளை படைத்தான். கழ முனைகளில் மட்டுமன்றி மிகவும் சிக்கலான இலக்குகளுக்குள் எல்லாம் ஆழ ஊடுருவி தனது பணியை சிறப்பாக செய்துமுடித்துக் காட்டியவர் “சேரன்”

அவரது சாதனைகள் அனைத்தையும் வெளியில் சொல்லிவிடமுடியாது. அவ்வாறான ஒரு ஒப்பற்ற மாவீரனை இழந்து நிற்கிறது தமிழீழ தேசம்.

வீர வணக்கம் சேரன் அண்ணா

.

Updated: February 2, 2019 — 11:20 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *