திருகோணமலையில் எல்லைப்புற தமிழ்கிராமங்களில் தமிழ் சமுகபற்றாளரினால் இலவச மருத்துவமுகாம்.!

சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட லிங்கபுரம், ஆதியம்மன்கேணி ஆகிய கிராம மக்களின் நலனுக்காக CANE அமைப்பு மற்றும் RUN to Beat Cancer in ஆகியோருடன் திருகோணமலை பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் பி.கணேகபாகு, புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சசிகலா பரமகுலசிங்கம், வைத்தியர் கனேஸ் வசந்தன், வைத்தியர் ஜி. பிரதீபா ஆகியோர் இணைந்து நடாத்திய இலவச புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாமும் ஏனைய நோய்களுக்கான வைத்திய முகாமும் நேற்று01.02.2019 வெள்ளிக்கிழமை லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது 177க்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன்பெற்றிருந்தனர். இதில் புற்று நோயாளிகள் 9பேர் இனம் காணப்பட்டனர். இந்த மருத்துவ முகாம் இக்கிராம மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது.

Updated: February 3, 2019 — 7:57 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *