கொட்டும் மழையிலும் சிறீலங்கா அரசிற்கு எதிராக கிழக்கில் போராட்டம் !

வடகிழக்கு தமிழ் மக்கள் சிறீலங்காவின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அறிவித்து தமிழ்ப் பிரதேசங்களில் பாரிய எதிர்புப் போராட்டங்களை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாணத்தில் வந்தாறுமூலை பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொட்டும் மழைக்கு மத்தியிலும் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த வாலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடன் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
மேலும் போராட்டதில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என கேட்டும் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் காணி அபகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியிருந்தனர்..
Updated: February 4, 2019 — 11:02 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *