தேச விரோத ஒட்டுண்ணிகளும், தமிழீழ மக்களும்.!

தேச விரோத ஒட்டுண்ணிகளும், தமிழீழ மக்களும்.!

இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டு அகன்று கொண்டிருந்த நேரம் மீண்டும் தலைவரால் புலிகள் மறுசீரமைக்கப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும்/ துறைகளுக்கும் புதிதாக தளபதிகள் நியமிக்கப்பட்டு போராளிகளும் பிரித்து ஒழுங்கமைக்கப்பட்டது.

யாழ்மாவட்ட சிறப்புத்தளபதியாக பாணுஅண்ணையும் (பிராவோ) தளபதியாக ராஜன் அண்ணையும் (ரோமியோ நவம்பர்) நியமிக்கப்பட்டு அவர்களின் தலைமையில் முதல் கட்டமாக 600 பேர் கொண்ட போராளிகள் யாழ் நோக்கி நகர்ந்தனர்.

இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டு வெளியேறும் போது TELO EPRLF ENDLF போன்ற தேசவிரோத ஒட்டுண்ணிகளுக்கு, இந்திய உளவுத்துறையான றோவினால், அவர்களின் தயாரிப்பான AK-M 70 ரக துப்பாக்கிகள் பெரும் தொகையில் அள்ளி கொடுக்கப்பட்டிருந்தது புலிகளை அழிப்பதற்கு.

யாழினுள் நுழைந்த புலிகள் முதல் கட்டமாக மணியன் தோட்டத்தில் தங்கி இருந்த EPRLF மீதும் கொழும்புத்துறையில் தங்கி இருந்த ENDLF மீதும் திடீர் தாக்குதலை தொடுத்தனர். துரோகிகள் அழித்தொழிக்கப்பட்டு பெரும் தொகை ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது.
மணியம் தோட்டத்தில் சித்திரவதை கூடமும், கொல்லப்பட்டவர்களின் புதை குழிகளும் அன்று கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த தாக்குதல் நேரம் றொபேட், சுரேஷ் தலைமையில் அசோக்கா ஹோட்டலில் தங்கி இருந்த “மண்டையன் குழு” மீதான தாக்குதலுக்கு ரங்கண்ணை தலைமையில் ஒரு அணி நகர்ந்து தாக்குதலை தொடுத்த நேரம், துரோகிகள் அங்கிருந்து பலாலிக்கு தப்பிச்ச சென்றிருந்தனர்.

ஹோட்டலின் உள் நுழைந்த புலிகள் ஒரு அறையில் இருந்து இவர்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட, பள்ளி சீருடையுடன் இருந்த பெண் பிள்ளைகள் உட்பட ஐந்து பெண்களை மீட்டு பத்திரமாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். இன்னொரு அறைய திறந்த போது அறை முழுவதும் இரத்த கறைகளும், பெண்களின் பள்ளிச் சீருடைகள் உட்பட உள்ளாடைகளுடன் நிறைந்திருந்தது.

ஹோட்டலின் பின்புறம் அமைந்திருந்த குட்டை ஒன்றின் அருகில் இருந்த குழியில் அழுகிய நிலையில் உடலங்களும் இருந்தது. இதன் கண் கண்ட சாட்சிகள் ஆறு பேருக்கு மேல் இப்போதும் எனக்கு தெரிய உயிருடன் வாழ்கிறார்கள்.

இப்படி இந்த ஒட்டுண்ணிகள் தங்கி இருந்த முகாங்களில் பலரது மரண ஓலமே நிறைந்திருந்தது. இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழுக்களின் கொலைகள் என்பது அன்றைய நேரத்தில் மக்களை பீதியில் உறைய வைத்த காலம் அது.
அதிலும் தொடந்து மண்டையில் போடுவதாலேயே தங்களின் குழுவுக்கு “”மண்டையன் குழு”” என்ற அடைமொழியுடன் குடும்பம் குடும்பமாக கொன்றொழித்தவர்கள் இன்று தமக்கு தாமே வெள்ளை அடிக்கின்றனர்.

நீங்கள் பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் தமிழர் நீங்கள் செய்த கொலை கொள்ளை பாலியல் வல்லுறவுகளை மன்னிக்க போவதும் இல்லை மறக்க போவதும் இல்லை.

Updated: February 8, 2019 — 8:40 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *