நீண்ட போராட்டத்தின் பின் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூபி !!

நீண்ட போராட்டத்தின் பின் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் தூபி !!
 
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபி யாழ். பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
 
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு குறித்த நினைவு தூபி நேற்று நிறுவப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலை மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட து. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலை நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
 
அதனால் ஆரம்ப கட்ட வேலையுடன் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று குறித்த தூபியை முழுமையாக பல்கலை மாணவர்கள் நிறுவியுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள், தற்போது பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் உறவுகள் என பலருடைய நினைவாக இந்த தூபி பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த தூபியின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவுசெய்யப்பட்டு இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவு தூபியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன….
Updated: February 12, 2019 — 12:36 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *