காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி ஜ.நா நோக்கிய அறைகூவல்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி வேண்டி எதிர்வரும் 25ம் திகதி வடக்குமாகாணம் முழுவதும் கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர் கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம். அன்றையதினம் தம்மால் மேற்கொள்ளப்படும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் விதமாகவே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடக்கு, கிழக்கு தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை எதிர்வரும் 25ம் திகதி நடத்தவுள்ளனர். அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக ஒன்று திரண்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்க ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த வேண்டுமென்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக, அவர்களது உறவினர்கள் மட்டுமே நீதி கேட்கவில்லை, அனைத்து மக்களும் நீதி கேட்கிறார்கள் என்பதை ஐ.நா சபைக்கு தெரியப்படுத்த, அன்று வடக்கு முழுவதும் கதவடைப்பை மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்காக போராடுபவர்களிற்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரி நடத்தப்படும் பேரணி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து, ஏ9 வீதி ஊடாக டிப்பேச்சந்தியை அடைந்து, இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தை அடைந்து மனு கையளிக்கப்படும்.

Updated: February 19, 2019 — 9:20 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *