யுத்தத்தின் வலியும் வேதனையும் சுமந்திரனுக்கு புரியாது; அனந்தி..

யுத்தத்தின் வலியும் வேதனையும் சுமந்திரனுக்கு புரியாது; அனந்தி..

10 வருடங்களாகியும் யுத்தக் குற்றங் கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கவோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடுகளை வழங் கவோ தயாரில்லாத இலங்கை அரசாங்கம் தற்போது இனப்படு கொலையை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறுவது வேடிக்கையானது. பிரதமரின் இக்கூற்றை தமிழ் மக்கள் ஏற்கத் தயாரில்லை என ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை அனுபவிக்காத சுமந்திரனுக்கு அதன் வலியும், வேதனையும் புரியவே புரியாது என்று குறிப்பிட்ட அவர், இனப்படுகொலைகளை மறப்போம், மன்னிப்போம் எனப் பிரதமர் கூறிய போது அங்கிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மெளனமாக இருந்துவிட்டு இப்போது மக்கள் முன் வந்து அவர்கள் நாடகமாடுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்றுத் தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

வடக்கிற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாகவே இனப்படுகொலைகளை மறப்போம், மன்னிப்போம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு பிரதமர் கூறிய போது வேடிக்கை பார்த்துக் கொண்டு மெளனமாக இருந்த கூட்டமைப்பினர் இப்போது மக்கள் மத்தியில் வந்து நாடகமாடுகின்றனர்.

ஜெனீவா அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் அடுத்து வரும் தேர்தல்களை இலக்காக வைத்துமே பிரதமர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார் என்பதே உண்மையானது. தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கின்ற நிலையில் அவை தொடர்பில் நீதியான விசாரணையயான்று முன்னெடுக்கப்பட வேண்டுமென்றே வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும் விசாரணைகளை மேற்கொள்ளாது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காது, மறப்போம், மன்னிப்போம் என்று பிரதமர் கூறுவது வேடிக்கையானது. அவ்வாறு பிரதமர் தனக்கு தேவையானதை தேவையான நேரத்தில் கூறுகின்ற போது அவருக்குத் துணையாகவும் அவடைய கருத்துக்களுக்கும்செயற்பாடுகளுக்கும் ஒத்து ஊதுபவர்கள் போன்றும் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறலைச் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும். இதனைச் செய்யாமல் நல்லிணக்கம் என்பது ஏற்பட முடியாது. ஆகவே இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நீதியை வழங்கவேண்டுமென்பதே எங்களது கோரிக்கையாகும்.

அதனை விடுத்து பிரதமர் கூறியமை போன்று மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சிற்கே இடமில்லை. மன்னிப்பு என்பது வழங்க முடியாதது. அவ்வாறு மன்னிப்பு வழங்கினால் அது இறந்தவர்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும். வெறுமனே அரசியல்வாதிகளும் மற்றவர்களும் இதனைத் தீர்மானிக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் நீதியைக் கோருகின்ற போது நீதி வழங்கப்படுவது அவசியமானது.

ஆகவே குற்றம் புரிந்த முப்படைகளும் அதனை வழிநடத்தியவர்களும் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதே வேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இரு தரப்பிலும் குற்றங்கள் இழைக்கப்பட்டன எனக் கூறுகின்றார். அவர் உண்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த நாட்டில் அழிக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதற்காகத் தற்காப்பு என்ற அடிப்படையில் விடுதலைப் போராட்டம் தோற்றம் பெற்றது. அவர்கள் மக்களை எதுவும் செய்யவில்லை. அவர்களது தியாகம் போற்றுதற்குரியது. ஒழுக்கம் நிறைந்த உன்னதமான போராட்டமாக அது உலகம் முழுவதும் போற்றப்படுகின்றது.

கொத்துக் குண்டுகளையும் நச்சுக் குண்டுளையும் பாவித்து அரசாங்கம்தான் மக்களைக் கொன்று குவித்தது. தன் நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கம் தான் தவறிவிட்டது. நிலைமைகள் அவ்வாறிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் தான் போராட்டத்தில் நின்றவர் போன்றும்,அங்கு நடந்தவற்றை அனுபவித்தர் போன்றும், கூறுகின்றமை வேடிக்யானதுஇ

உண்மையில் வலியையும் வேதனையையும் அவர்கள் அனுபவித்திருந்தால்தானே அதன் தாற்பரியம் அவர்களுக்குத் தெரியும். அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காகத் திட்டமிட்ட வகையில் அவர் கூறுகின்ற கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவை அல்ல.

மேலும் நான் அரச உத்தியோகத்தில் இருந்துதான் அரசியலுக்கு நுழைந்திருந்தேன்.; அதற்கமைய மாகாண சபையில் ஐந்து வருடங்கள் இருந்த நிலையில் அந்தச் சபையின் காலம் முடிவடைந்த பின்னர் இப்போது மீளவும் என்னுடைய வேலைக்குச் சென்றிருக்கிறேன்” என்றார்.

Updated: February 20, 2019 — 8:06 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *