இராணுவத்தினர் போர்குற்றத்தில் ஈடுபட மகிந்தவும், கோத்தாவும் கட்டளை இட்டனர்: பொன்சேகா தகவல்..

இராணுவத்தினர் போர்குற்றத்தில் ஈடுபட மகிந்தவும், கோத்தாவும் கட்டளை இட்டனர்: பொன்சேகா தகவல்..

ஶ்ரீலங்கா இரா­ணு­வத்­தி­னர் அனை­வ­ரும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை. அவர்­க­ளில் சிலர் மட்­டும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­னர். இரா­ணு­வத்­தி­னர் எந்­தச் சந்­தர்ப்­பங்­க­ளி­லும் போர்க்­குற்­றங்­க­ளில் ஈடு­ப­ட­வில்லை என்று கூற முடி­யாது.

போர்க்­குற்­றம் புரிந்த இரா­ணு­வத்­தி­ன­ரைப் பாது­காப்­ப­தற்கு ராஜ­பக்ச அணி­யி­னர் அன்­றும் முயற்சி செய்­தார்­கள் இன்­றும் முயற்சி செய்கிறார்கள். இலங்கை இரா­ணு­வத்­தி­ன­ரின் நற்­பெ­யரை பன்­னாட்டு மட்­டத்­தில் நாம் பாதுகாக்க வேண்­டும். குற்­றம் செய்­த­வர்­கள் தண்­டிக்­கப்­பட வேண்­டும்.

இவ்­வாறு தெரி­வித்­தார் முன்­னாள் இரா­ணு­வத் தள­ப­தி­யும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ‘பீல்ட் மார்­சல்’ சரத் பொன்­சேகா.
இரா­ணு­வத்­தி­னர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும், முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும், இறு­திப் போரின்­போது கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் நிகழ்ச்­சின் நிர­லின் பிர­கா­ரம் செயற்­பட்டு போர் நிறை­வ­டைந்த பின்­னர் இரா­ணு­வத் தள­ப­தி­யா­கப் பொறுப்­பேற்ற ஜகத் ஜய­சூ­ரி­ய­வும் முழுப் பொறுப்பு.

இறு­திப்­போ­ரின்­போது இரா­ணு­வத்­தின் பிர­தான தள­ப­தி­யாக நானே இருந்­தேன். பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ராக கோத்­த­பாய ராஜ­பக்ச இருந்­தார். அரச தலை­வ­ராக மகிந்த ராஜ­பக்ச இருந்­தார். போரை விரை­வில் முடி­வுக்­குக் கொண்­டு­வர கோத்­த­பாய ராஜ­பக்ச ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்­தி­ருந்­தார். அந்த நிகழ்ச்சி நிர­லுக்கு மகிந்த ராஜ­பக்ச அனு­மதி வழங்­கி­யி­ருந்­தார். ஆனால், நான் எனது சுய­புத்­தி­யில் செயற்­பட்­டேன். போரில் பெரும் வெற்­றியை நாட்­டுக்­குப் பெற்­றுக்­கொ­டுத்­தேன்.

எனி­னும், கோத்­த­பாய ராஜ­பக்ச தான் தயா­ரித்த நிகழ்ச்சி நிரலை இறு­திப் போரின்­போ­தும் போர் நிறை­வ­டைந்த பின்­ன­ரும் மறை­மு­க­மாக நடை­மு­றைப்­ப­டுத்தி இருந்­தார். இதற்கு இரா­ணு­வத் தள­ப­தி­க­ளில் ஒரு­வ­ராக இருந்த ஜகத் ஜய­சூ­ரிய முழுப் பங்­க­ளிப்பு வழங்­கி­னார்.

இவர்­கள் இரு­வ­ரி­ன­தும் இந்­தச் செயற்­பா­டு­க­ளி­னால் போரின் இறு­தி­யின்­போ­தும் அதன் பின்­ன­ரும் சில குற்­றங்­கள் இடம்­பெற்­ற­தாக எனக்­குத் தக­வல் கிடைத்­தது. இரா­ணு­வத்­தி­னர் மீதான போர்க்­குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு மகிந்த ராஜ­பக்­ச­வும், கோத்­த­பாய ராஜ­பக்­ச­வும், ஜகத் ஜய­சூ­ரி­ய­வும் பொறுப்­புக்­கூற வேண்­டும்.

அதை­வி­டுத்து கிளி­நொச்­சி­யில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க போர்க்­குற்­றம் தொடர்­பில் தெரி­வித்த கருத்தை இவர்­கள் விமர்­ச­னம் செய்­கின்­றார்­கள். தலைமை அமைச்­ச­ரின் கருத்தை விமர்­சிப்­ப­தற்கு இவர்­க­ளுக்கு எந்த அரு­க­தை­யும் இல்லை – என்­றார்.

Updated: February 21, 2019 — 7:10 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *