போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு..

போராட்டத்திற்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு..

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.

காணமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அவர்களது, உறவினர்கள் தொடர்ந்தும் போராட்டங்கள் நடாத்தி வரும் நிலையில் அவர்களில் பலர் ஏமாற்றம் அடைந்து இறந்து விட்ட சம்பவங்களும் தொடர்கின்றன.

வடக்கு மாகாணம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்தைக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்து, வடக்கு முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலையில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அத்தகைய ஜனநாயக வழிப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை வழங்கும்.

வட மாகாணப் பாடசாலைகளில் கடமை புரியும் அதிபர்கள், ஆசிரியர்கள் கடமைகளைப் புறக்கணித்து பூரண ஆதரவை வழங்குமாறு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என்று சங்கம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated: February 23, 2019 — 8:04 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *