சிங்கள இனவாத இராணுவத்தின் கோட்டை தகர்க்கப்பட்ட நாள்.!

சிங்கள இனவாத இராணுவத்தின் கோட்டை தகர்க்கப்பட்ட நாள்.!

யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தின் ஒரு கோட்டையாக விளங்கிய குருநகர் இராணுவ முகாம் 1984 பெப்ரவரி 24ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்கப்பட்டடு இன்றுடன் முப்பத்தைந்து ஆண்டுகள் ஆகிறது

இந்தக் குண்டு வெடிப்புத் தாக்குதலால் முழுக்கட்டடமும் தகர்ந்து விழுந்து தரைமட்டமாகியது. கற்குவியலைத் தவிர ஒரு இராணுவமுகாம் இங்கு இருந்ததற்கான தடயம்கூட இல்லாத அளவுக்கு இம்முகாம் நாச மாக்கப்பட்டது.

குருநகரில் அமைந்திருந்த இந்த இராணுவ முகாம் வடக்கே குடிகொண்டிருந்த சிங்கள இராணுவத்தினரின் முன்னாள் நிர்வாகத் தலைமையகமாக இயங்கி வந்தது. சிங்கள வெறியரின் சித்திரவதைக்குப் பெயர்போன இடமாகவும் இது விளங்கியது. நூற்றுக்கணக்கான தமிழீழ விடுதலைப் போராளிகள் இந்த இராணுவமுகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு மிருகத்தனமாக சித்திரவதைக்கு ஆளாகினர்.

1983 ஜூலை மாதம் விடுதலைப் புலிகள் திருநெல்வேலியில் பதின்மூன்று இராணுவப் படையினரைச் சுட்டுக் கொன்றதையடுத்து சிங்கள இராணுவத்தினர் இந்த இராணுவ முகாமை விட்டுத் தற்காலிகமாக இடம் பெயர்ந்தனர். இந்த முகாமை விஸ்தரித்து, புதிய அரண்களை நிறுவிப் பாதுகாப்புகள் நிறைந்த ஒரு கோட்டையாக மாற்றியமைப்பதற்குச் சிங்கள இராணுவத் தலைமைப்பீடம், புதிய திட்டம் ஒன்றைத் தீட்டியது.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் இந்த முகாமைக் குண்டு வைத்துத் தகர்த்தமை சிங்கள அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. யாழ்நகரின் மத்தியில் பலத்த கண்காணிப்புகள் போடப்பட்டிருந்தும் இச்சம்பவம் நிகழ்ந்தமை அரசுக்குத் திகிலுடன் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

Updated: February 24, 2019 — 6:48 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *