நந்திக்கடல் -மேரி கொல்வின்..

நந்திக்கடல் -மேரி கொல்வின்..” ஐ.நாவின் தூதுவராக வந்த நம்பியாரின் பங்களிப்பு சந்தேகத்திற்கிடமானது.
அவரின் சகோதரர், சரிஷ், 2002 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்கா இராணுவத்துக்கு ஆலோசகராக இருந்துள்ளார்.

நடேசன் தமது பாதுகாப்புக்கு நம்பியாரின் வருகை அவசியம் தேவை என்று கூறினார்.

நியூயோர்க்கில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரப்பிரிவு ஒன்றினூடாக நம்பியாரைத் தொடர்பு கொண்டேன். அப்போது அங்கே நேரம் காலை 5:30 ஆக இருந்தது.

அவரும் தான் நடேசன் மற்றும் புலித்தேவனின் பாதுகாப்பை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நிச்சயமாக்கிக் கொண்டதாகக் கூறினார். அவர்கள் வெள்ளைக் கொடியைப் பிடித்து வந்தால் சரியென்றும் கூறினார்.
அவர்கள் போனார்கள்.

ஆனால் அவர்கள் கொல்லப்பட்டார்கள். எங்கே இந்த தவறு நடந்தது? விரைவில் கண்டுபிடிப்பேன்.” #மேரிகொல்வின்/ BBC

ஆனால் மேரி கொல்வினும் சிரியாவில் கொல்லப்பட்டுவிட்டார்.

இது ‘அவர் ஏன் கொல்லப்பட்டார் ?’என்ற கதையின் பின்புலம் மட்டுமல்ல, போராடும் தேசிய இனங்கள் அரச பயங்கரவாதத்திடம் ‘சரணடவதிலுள்ள’ ஆபத்துக்கள் குறித்த – அந்த அரச பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை கட்டிக் காக்கும் உலக ஒழுங்கு குறித்த எச்சரிக்கை மற்றும் பொறிமுறைகளை வகுத்த ‘நந்திக்கடல்’ கோட்பாடுகள் உருவான கதையின் பின்புலமும் இதுதான்.

“ஆயுதங்களை கைவிடுதல் என்பது ஒரு வகையில் சரணடைவுதான், ஆனாலும் என்னிடம் பேசிய நடேசன் ‘சரணடைவு’ என்ற சொல்லைப் பாவிக்க மறுத்தார் – அதில் இறுக்கமாகவும் இருந்தார்”. #மேரிகொல்வின்/ BBC

மேரி கொல்வின் தமிழின அழிப்பின் ஒரு அனைத்துலகச் சாட்சி மட்டுமல்ல, புலிகள் தமது ‘மவுனத்தை’ ஒரு கோட்பாட்டுருவாக்கம் செய்யும் முனைப்பில் இருந்ததற்கான வரலாற்று சாட்சியும் கூட..

கடைசி நேரத்திலும் வரலாற்றை தெளிவாக எழுதுவதிலேயே புலிகள் குறியாக இருந்தார்கள் . ஒரு தவறான வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு விட்டுச்செல்ல அவர்கள் தயாராக இல்லை. அதுதான் “சரணடைவு” என்ற பதத்தை தமக்காக பேச வந்த மேரிகொல்வினிடம்கூட பாவிக்க மறுத்தார்கள். மிக முக்கியமான வரலாற்று செய்தி இது.

இதுவே பின்னாளில் ‘நந்திக்கடல்’ கோட்பாடுகளாக கருத்துருவாக்கம் பெற்றன.

Updated: February 24, 2019 — 8:22 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *