முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்திருக்கின்ற பண்டாரவன்னியனின் கோட்டையானது தற்போதைய சூழலில்உடைந்து செல்கின்ற நிலமை இருக்கின்ற போதும் ஒரு சிறிய பகுதி மட்டுமே எஞ்சி இருக்கின்றது.
குறித்த பகுதியினை பாதுகாப்பதாக பல்வேறு தரப்புகளால் கூறப்பட்டாலும் இன்றுவரை அது பாதுகாப்பில்லாமல் அழிவடைந்து செல்வதை அறியக்கூடியதாக இருக்கிறது .
எனவே இந்த குறித்த சிலையை மையமாகக் கொண்டு குறித்த நகர்ப்பகுதியில் அந்த சிலையை நோக்கியவாறு வடக்கு மாகாணசபையினால் பாரியளவிலான ஒரு பண்டாரவன்னியன் சிலையும் நிறுவப்பட்டது.
இருப்பினும் குறித்த கட்டட பகுதியை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு கொட்டகை அமைப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் இன்று வரை அதற்குரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை
எனவே குறித்த கட்டட பகுதியானது அழிவடைந்து செல்வதை தடுக்கும் முகமாக மிக விரைவாக அதனைப் பாதுகாக்க ஒரு கூடாரத்தை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.