தமிழர்கள் மீதான இன அழிப்பை நியாயப்படுத்த ஐ.நா செல்கிறார் வடமாகாண ஆளுநர் !!

ஜெனிவாவில் ஸ்ரீலங்கா தமது முரண்பாடுகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கோருவதற்கான மூவர் அடங்கிய குழுவில் அன்மையில் வடமாகாண ஆளுனராக நியமனம் வழங்கப்பட்ட தமிழரென அடையாளப்படுத்தப்படும் சுரேன் ராகவன் மைதிரிபால சிறீசேனாவினால் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளடங்கலாக 3 பேர் கொண்ட குழுவை ஐ. நா.சபைக்கு அனுப்பவுள்ளதாகவும், இந்த குழு இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கும் கோரிக்கையினை ஐ.நாவில் சமர்பிக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறியுள்ளார்..

இன்று காலை இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கலாநிதி சரத் அமுனுகம, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க, வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கவுள்ளனர்..

Updated: March 6, 2019 — 2:18 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *