பதற வைத்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை ! பெருங் கோபத்துடன் போராட்டத்தில் களமிறங்கிய மாணவர்கள்..!

பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்கக்கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோரும் கண்டனக் குரல்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி கொடூரத்திற்கு காரணமானவர்களை கைது செய்யவும், கடும் தண்டனை வழங்கக்கோரியும் திருச்சி மற்றும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால், பொள்ளாச்சி சம்பவம் மேலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Updated: March 12, 2019 — 1:18 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *