முற்றாக முடங்கியது தமிழீழம் – மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் ( 19 – 03 – 2019 ) !!

சர்வதேச விசாரணையினை வலியுறுத்தியும், இலங்கை அரசாங்கத்தினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டு செல்லுமாறு கோரியும் மட்டக்களப்பில் பாரிய மக்கள் எழுச்சி கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் இந்த போராட்டம் மேற்கொள்ப்பட்டது….

இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கலந்து கொண்டுள்ளதுடன், மதத்தலைவர்கள், அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

கல்லடி பாலத்தில் ஆரம்பமான இந்த போராட்டம் காரணமாக கல்லடி பாலத்தின் ஊடான பிரதான போக்குவரத்துகள் பல மணி நேரம் ஸ்தம்பிக்கும் நிலையேற்பட்டது. போராட்டங்களை நடாத்தி வரும்போது அது தொடர்பாக கவனம் செலுத்தாத ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தமது பிரச்சினையை உள்ளூர் பொறிமுறையில்தீர்க்கப்போவதாக தெரிவித்திருப்பதானது தமக்கு பெரும் ஏமாற்றத்தினைஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர்குடும்பசங்கத்தின் தலைவி அ. அமலநாயகி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களானசீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும்இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான துரைராஜசிங்கமும் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழீழத்தில் பல பகுதிகளில் ஹர்த்தால் மேற்கொள்ளப்படுவதால் தமிழீழம் முற்றாக முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

போராடுவோம் போராடுவோம்….

Updated: March 19, 2019 — 11:33 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *