தமிழர் வரலாற்றில் ஏப்ரல் மாதம் .!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன்  உட்பட


முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் . 04.04.2009.
பிரதான யாழ் கண்டி வீதி 9 திறப்பு உணர்வுபூர்வமான நிகழ்வு : 
ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மக்கள் பயணம் செய்ய முடியாதபடி சிங்களப்படையினரால் மூடப்பட்டுக் கிடந்த 9 எனப்படும் பிரதான யாழ் _ கண்டி வீதி அதிகாரபூர்வமாக 03.04.2002 அன்று திறந்துவைக்கப்பட்டது. இப்பாதை திறந்து வைக்கப்பட்ட அதேவேளை யாழ் குடாநாட்டில். அரசியல் பணிகளைமேற்கொள்வதற்கெனச் சென்ற 15 விடுதலைப் புலிகளை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரங்களுடன் தூக்கி அழைத்துச் சென்றனர்.
பஸ்திபாம்பிள்ளையும் அவரது அணியினரும் அழிப்பு
தமிழ் இளைஞர் பலரை சித்திரவதை செய்வதில் முன்னிலையில் நின்ற வரும். விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை ஒடுக்குவதில தீவிர செயற்பட்டவருமான சிறீலங்கா காவல்துறை ஆய்வாளர் பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான பொலிஸ் அணியினர் முருங்கன் பகுதிக்கு அருகே மடுறோட் பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாமொன்றை 07.04.1973 அன்று சுற்றி வளைத்தனர். மாவீரர் லெப் செல்லக்கிளி தலைமையிலான விடுதலைப் புலிகள் அணி யோசிதமாக பஸ்தியாம்பிள்ளை குழுவினரை மடக்கி அவர்களைத் தாக்கியழித்து அவர்களிடமிருந்து ஆயுதங்களையும் கைப்பற்றினர்
கிளிநொச்சியில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாளர் மாநாடு 
சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப்பின் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் நடத்திய செய்தியாளர் மாநாட்டிற்கு 95 உலகத்தின் பல பகுதிகளின் பிரபல செய்தி ஊடகங்களின் செய்தி யாளர்கள் மிகுந்த ஆவலுடன் வன்னி சென்று கலந்து கொண்டனர். எழுநூறிற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்ட இம் மாநாடு மிகச்சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டு நேர்த்தியான முறையில் வெற்றிகரமாக நடைபெற்றது. 10.04.2002 அன்று இம் மாநாடு நடை பெற்றது 

பண்டா செல்வா ஒப்பந்தம்.!
பண்டா செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது சிறீலங்காவின் பிரதமர் எஸ்டபிள்யூஆர். டி. பண்டாரநாயக்காவிற்கும் தமிழரசுக்கட்சித் தலைவர் தந்தை செல்வாவிற்கும் இடையில் மேற் கொள்ளப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் 18.04.1958 அன்று பண்டார நாயக்காவினால் கிழித்தெறியப்பட்டது .
யாழ் காவல் நிலையம் தகர்ப்பு
நன்கு பலப்படுத்தப்பட்டிருந்த வட தமிழீழம் யாழ் காவல் நிலையம் கேணல் கிட்டண்ணைாவின் வழிநடத்தலில் 10.04.1985 அன்று தகர்க்க ப்பட்டதோடு சிங்கள இராணுவ நகர்வுகளும் தடுக்கப்பட்டு முகாம்களுக்குள் இராணுவம் முடக்கப்பட்டது. 
திம்புப் பேச்சுவார்த்தை 
சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையே பூட்டானின் தலைநகர் திம்புவில் இந்திய அரசின் அனுசரணையுடன் 10.04.1985 அன்று பேச்சுவார்த்தை ஆரம்பமாகியது, சிறீலங்காவின் நயவஞ்சகத்தால் இப் பேச்சுவார்த்தை முயற்சி குழம்பியது 
மூன்றம் கட்ட ஈழப்போர் ஆரம்பம் 
சமாதான முயற்சிகள் எப்பயனுமற்று தொடர்ந்த வேளை சந்திரிகா அர சுடன் செய்த மோதல் தவிர்ப்பு ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தேசியத் தலைவர் அவர்கள் அறிவித்தார் 19.04.1995 அன்று விடுதலைப் புலிகளின் கடற் கரும்புலிகளால் முதலாவது தாக்குதல் திருமலைத் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்டது இதன் போது சிறீலங்காக் கடற்படையின் சங்காய் வகையைச் சேர்ந்த இரு பீரங்கிக்கப்பல்கள் அழிக்கப்பட்டன, இதன் பின் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. 
சூரியக்கதிர்-2 இராணுவ நடவடிக்கை 
தமிழ் மக்களைக் கொன்றொழித்து, சொத்துக்களை நாசமாக்கி, இலட்சக்கணக்கான தமிழ் மக்களை அகதிகளாக்கியசூரியக்கதிர்02 எனும் குறியீட்டுப்பெயர் கொண்ட இராணுவ நடவடிக்கையை 19.04.1996 அன்று சிறீலங்கா அரசபடைகள் ஆரம்பித்தன.
அவ்ரோ விமாணங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு அணியினரால் 28.04.1995 அன்று அவ்ரோ விமானம் பலாலித் தளத்தினுள் சுட்டு வீழ்த்தப்பட்டது. வான்படையின் உயர் அதிகாரிகள் உட்பட 40 படையினர் கொல்லப்பட்டார்கள் . 29.04.1995 அன்று இன்னொரு அவ்ரோ விமானம் நவக்கிரியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் பயணம் செய்த50 வரையான படையினர் கொல்லப்பட்டனர் 
அன்னை பூபதி நினைவு நாள்
ஒரு இனத்தின் அரசியல் சுபீட்சத்திற்காக ஆக்கிரமிப்பு நாட்டிற் கெதிராக உண்ணாவிரதப் போராட்டம் நாடாத்தி உயிர்நீத்த உலகின் முதற்பெண்மணி அன்னை பூபதி, 19.03.1988 முதல் 19.04.1988 வரையிலான ஒருமாத உண்ணாவிரதப் போராட்டத்தின்பிள் தமிழர் விடிவிற்காக தன்னை அர்ப்ப ணித்தார். அவரின் நினைவுநாள் 19.04.1988 அன்று ஆகும். 
வரலாற்றுப் புகழ்மிக்க ஆனையிறவுப் பெருந்தள அழிப்பு
தமிழீழ தேசத்தில் 240 வருட காலமாக அடிமைச் சின்னமாக விளங்கிய ஆனையிறவுப் பெருந்தளம் தமிழீழத் தேசியத் தலைவரின் வழிநடத்தலில் ஓயாத அலைகள் 3 படையணிகளால் 22.04.2000 அன்று அழிக் கப்பட்டது. 240சதுரக் கிலோ மீற்றரில் பரந்திருந்ததும், 15000 இராணு வத்தினரைக் கொண்டிருந்ததும், யாழ் குடாநாட்டின் வாசலில் பெரும் தடைக்கல்லாக இருந்ததுமான இப்படைத்தளம் மீட்கப்பட்டதானது தமிழர்களின் விடுதலை வரலாற்றில் வெற்றியின் ஒரு மைல்கல்லாகும். 1000த்திற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்ட இப் பெருந்தளத் தாக்குதலில் வெற்றிக்கு வித்தாக 35 போராளிகள் வீரச்சாவடைந்து வீர காவியம் படைத்தனர்.
தந்தை செல்வா நினைவுநாள்
தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர், தமிழினத்தின் உரிமைகளை அகிம்சை வழிமுறை மூலம் பெற்றுவிடத்துடித்த தலைவர்,கட்சிக்காகவும் இனத்திற்காகவும் அளப்பரிய தியாகங் களைச் செய்தவர் தந்தைசெல்வா. அவர் களின் நினைவுநாள் 26.04.1977 அன்று
Updated: April 1, 2019 — 5:09 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *