மன்னார் மனித புதைகுழி மனித எச்சங்கள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன !

வடதமிழீழம்  மன்னார் மனித புதைகுழியில் மேலதிகமாக அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் காணப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும் இன்றையதினம் 02.04.19 முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளது

கடந்த மாதம் 23 திகதி மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததுடன் களனி பல்கலைகழக பேராசியர் ராஜ் சோமதேவ் அவர்களின் அறிக்கையானது மூன்று மாத காலப்பகுதியில் சமர்பிக்கும் படியாக கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த மனித புதைகுழியானது முழுமையாக சீர் செய்யப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு மேலதிகமாக காணப்பட்ட அனைத்து மனித எச்சங்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது

அதே நேரத்தில் குறித்த மனித புதைகுழியானது சிறிய அளவில் பெரிதுபடுத்தப்பட்டு மீண்டும் பொலித்தின் மற்றும் பாதுகாப்பாக மூன்று மாத காலப்பகுதிக்கு மூடப்படவுள்ளது இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பேராசிரியர் ராஜ் சோமதேவினால் மன்னார் மனித புதைகுழி தொடர்பாகவும் மண் படைகள் தொடர்பகவும் அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது..!!

Updated: April 3, 2019 — 4:57 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *