அரசிற்கு கால நீடிப்பு வழங்கியது பிழை சர்வதேசம் எமக்கான தீர்வினை தரவேண்டும் – ம.ஈஸ்வரி!

வடதமிழீழம்  முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று (04.04.19)  தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

இன்னிலையில் இன்று முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்ட கொட்டகையில் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள் இதன்போது கருத்து தெரிவித்த மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்கள்
ஸ்ரீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்கக்கூடாது என நாம் எத்தனையோ கவணயீர்ப்பு போராட்டங்கள் செய்து ஐ.நாவுக்கு மகஜர்கள் வழங்கியுள்ளோம்.  இதை கருத்தில்கொள்ளாது சர்வதேசம் ஸ்ரீலங்காக்கு காலநீடிப்பு வழங்கியுள்ளது.
இதே போன்று எமது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும் அதற்கு எதுவித எதிர்ப்பு தெரிவிக்காது அதற்கு சாதகமாக தலையாட்டிப்போட்டு வந்துள்ளார்கள்.
ஸ்ரீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்கியது பிழை என்று சர்வதேசம் ஏற்று எமக்கான தீர்வு தரவேண்டும் என்பதற்காகவும்.
எமது உறவுகளை வட்டுவாகலில்தான் இராணுவத்திடம் கையளித்தோம் என்பதனை சர்வதேசத்திற்கு காட்டுவதற்காகவும் முல்லைத்தீவு நகரத்திலிருந்து ஆரம்பித்து  வட்டுவாகல் வரைக்கும் ஊர்வலமாகச்சென்று தமது கவணயீர்ப்பு போராட்டத்தை செய்யவுள்ளதாகவும்  அதற்கு அணைத்து மக்களையும் நலன்விரும்பிகளையும் பங்குகொள்ளுமாறும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் இணைப்பாளர் ம.ஈஸ்வரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
Updated: April 5, 2019 — 9:12 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *