தமிழீழ மீனவர்களின் வலைகளை அறுத்து தொழிலை ஶ்ரீலங்கா மீனவர்கள் !!!!

வடதமிழீழம்: முல்லைத்தீவில் தங்கி இருந்து கடலட்டை பிடிக்கும் தொழில் செய்யும் ஶ்ரீலங்கா மீனவர்களால் தமது வலைகள் அறுக்கப்பட்டு சேதமாக்க படுவதனால் தமது வாழ்வாதராம் கேள்விக்கு உள்ளாகியுள்ளதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஶ்ரீலங்கா மீனவர்கள் முல்லைத்தீவில் தங்கி நின்று கடலட்டை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். தமது தொழிலுக்காக நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த மீனவர்கள் முல்லைத்தீவில் இருந்த காங்கேசன்துறையை அண்டிய யாழ்.குடா கடல் பகுதிக்கு வந்தே கடலட்டை பிடிக்கும் தொழில் செய்கின்றனர். அவர்கள் தாங்கள் தங்கியுள்ள பகுதியில் இருந்து தொழில் செய்யும் பகுதிக்கு சென்று வரும் போது , வடமராட்சி கிழக்கு கடலில் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகளை அறுத்து சேதமாக்குவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள்.

அது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் ,

ஶ்ரீலங்கா மீனவர்கள் , நாங்கள் தொழில் செய்யும் கடற்பரப்பில் தாறுமாறாக தமது படகுகளை செலுத்தி எமது வலைகளை சேதமாக்கு கின்றார்கள். அதனால் ஒவ்வொரு தொழிலாளிகளினதும், முரல் வலைகள் உட்பட வலைகள் 5 தொடக்கம் 10 வெட்டுக்கள் தினமும் விழுகின்றன.

இவ்வாறாக தினமும் தொடர்ந்து வலைகள் சேதமாக்கப்பட்டால் நாம் தொழிலை முழுமையாக கைவிட வேண்டிய நிலைமையே ஏற்படும். எனவே எமது வாழ்வாதாரத்தை பெருக்கவும் , தொழிலை பாதுகாக்கவும் நடவடிக்கையை உரிய தரப்பினர் எடுக்க வேண்டும்.

கடலட்டை தொழில் செய்வோர் , அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட இடத்திலையே தொழில் செய்ய ஆவன செய்ய வேண்டும் இல்லை எனில் வடக்கில் இருந்து கடலட்டை தொழில் செய்யும் ஶ்ரீலங்கா மீனவர்களின் அனுமதிகளை இரத்து செய்து அவர்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை ஶ்ரீலங்கா மீனவர்கள் கடலட்டை தொழில் செய்வதற்கு கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தால் அனுமதிகள் வழங்கப்பட்டு உள்ளமையால் , அந்த விடயத்தில் தம்மால் தலையிட முடியாத நிலை காணப்படுவதாக யாழ்.மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைகள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated: April 8, 2019 — 6:26 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *