மக்கள்மயமாக்கப்படும் சிறிலங்கா இராணுவத்தினர் இனவழிப்பின் இன்னொருவடிவம்.!

சிறிலங்கா அரசின் காடையர் படையணியான 57வது இராணுவ படைப்பிரிவினால் இரணைமடு

குளத்தில் ஐம்பதாயிரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது . குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது. 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி இனப்படுகொலையாளி கேணல் ஜானக ரணசிங்க அவர்களின்தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வு காலை 9 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது இரணைமடு குளத்தில் குறித்த மீன்குஞ்சுகள் விடப்பட்டன.

இவ்வாறன செயற்பாடுகள் சிறிலங்கா இராணுவத்தை மக்கள் மயப்படுத்துவதற்கான ஒரு நிகழ்ச்சி நிரல் ஆகும்.கிழக்கு தைமோரில் இந்தோனேசிய கட்டுப்பாட்டுக்குள் இருந்த மக்களிடமும் இதே மாதிரியான இராணுவத்தை மக்கள் மயப்படுத்தும் செயற்பாடுகள் நடைபெற்றன.

இவ்வாறு விடுதலை வேண்டி போராடிய இனங்களை திசைதிருப்புவதற்காக ஆக்கிரமிப்பு இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது வரலாறே.

57 ஆவது படைப்பிரிவானது மடு பிரதேசத்தில் இருந்து கிளிநொச்சிவரையான ஆக்கிரமிப்பு படுகொலைக்களுக்கும் காரணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated: April 13, 2019 — 4:59 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *