அரசியல் வாதிகளே அடுத்த தேர்தலுக்கு இந்த மண்ணிற்கு வந்திடரீர்கள்-கேப்பாபுலவு மக்கள்..!!

கேப்பாபுலவு நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தாங்கள் சொந்த நிலத்தில் வாழும் வரை தங்களுக்கு சித்திரைப்புத்தாண்டு இல்லை கடந்த பத்து ஆண்டுகளாக இது தொடர்கின்றது என்று தெரிவித்துள்ளார்கள்.

13.04.19 அன்று கேப்பாபுலவு மக்கள் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள் இதன்போது கேப்பாபுலவு நிலமீட்பு போராட்ட குழுவினை சேர்ந்த அ.அரியகலா,சந்திரலீலா,இந்திராணி ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

அவர்கள் தெரிவிக்கையில் கேப்பாபுலவு மக்கள் தொடர்போராட்டத்தினை தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் மூன்றாவது சித்திரை புத்தாண்டை கடந்து 774 ஆவது நாளான மூன்று ஆண்டுகள் வீதியில் செல்லணா துன்பங்களை சுமந்து வீதியில் எங்கள் உரிமைக்காக போராடி வருகின்றவேளை சிங்கள அரசும் தமிழ்மக்கள் பிரதிநிதிகளும் கோலாகலமாக வீடுகளில் புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள்.

கேப்பாபுலவு பூர்வீக மக்களை இந்த மூன்று ஆண்டுகளுக்குள் திரும்பி பார்க்காமல் எங்கள் பிரச்சனைக்கு ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கமுடியாதவர்களாக இருக்கின்ற நிலையினை பார்க்கும் போது மிகவும் வேதனைக்குரிய விடையம்.

எங்கள் பூர்வீகமண்ணைத்தான் நாங்கள் கேட்கின்றோம் நாங்கள் வீதியோரத்தில் கிடப்பது உலக அரசிற்கும் தமிழ் பிரதிநிதிகளுக்கும் சர்வதேசத்திற்கும் எங்கள் பிரச்சனை கண்மூடித்தனமாக செயலாக இருக்கின்றது.

இந்த கெடும் வெய்யிலும் சிறுவர்கள் பிள்ளைகள் என அனைவரும் வீதிஓரங்களில் கிடக்கின்றோம் பல குழந்தைகள் மாவட்டமருத்துவமனையில் நோயாளர்களாக கடும் வெப்பத்தினால் உடல்முழுதும் அக்கிபோடப்பட்ட நிலையில் பலர் மருத்துவமனையில் கிடக்கின்றார்கள்.

எங்கள் பூர்வீக வாழ்இடத்திற்கு நாங்கள் செல்லவேண்டும் என்ற வலிகளை சுமந்து நிக்கின்றோம் எங்கள் பூர்வீக வாழ்இடத்தினை பற்றி மக்கள் பிரதிநிதிகளும் அரசும் பேச்சு நடத்துகின்றார்கள் விடுகின்றோம் கதைக்கின்றோம் என்று சொல்கின்றார்கள் ஊடகங்கள் வாயிலாக நாங்கள் அறியும் செய்திகள் வதந்தி செய்தி என்று நாங்கள் அறிகின்றோம் எங்கள் காணிவிடுவிப்பு தொடர்பில் எந்த முன்னேற்றமும் இல்லை
மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் எங்கள் நிலத்தில் படையினர் உல்லாச விடுதிகளை அமைத்து உல்லாசம் கொண்டாட நாங்கள் எதிர் வாயிலில் வெய்யிலில் துவண்டு துடித்துக்கொண்டு எங்களின் பூர்விக மண்ணை பார்த்து ஏங்கித்தவிக்கும் இந்த நிலைக்கு எங்களை தள்ளிவிட்டார்கள்.

பத்து ஆண்டுகளாக எங்கள் கேப்பாபுலவு மக்களுக்கு புத்தாண்டு இல்லை இன்றுவிடுவார்கள் நாளைவிடுவார்கள் என்று ஒவ்வொரு நல்லதினம் வரும்போதும் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றோம் எங்கள் பிள்ளைகள் காத்துக்கொண்டிருக்கின்றார்கள் எப்போது எங்கள் நிலத்திற்கு சொல்வோம் என்று தமிழ் அரசியல் வாதிகள் தமிழ்மக்களுக்கு நீதி பெற்றுதருவார்கள் எங்களுக்காக கதைப்பார்கள் என்று வாக்கு வாங்கி கதிரையில் குந்திக்கொண்டு எங்களை கண்டுகொள்ளாமல் அரசினை காப்பாற்றுபவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

இந்த கேப்பாபுலவு போராட்ட மண்ணில் இருந்து சொல்கின்றோம் எங்கள் நிலங்கள் விடுவிக்காத பட்சத்தில் அடுத்த தேர்தலுக்காக இந்த மண்ணிற்கு யாரும் வந்திடாதீர்கள் தமிழ் அரசியல் வாதிகள் ஜ.நா மனிதஉரிமை மன்ற கூட்டம் நடைபெறும் போது அரசினை காப்பாற்றுவதற்காக ஒரு தகவலை வெளியிட்டார்கள் அதன் பின்னர் எந்த கதையும் இல்லை என்றும் கேப்பாபுலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

Updated: April 14, 2019 — 7:33 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *