நிலத்தினை விற்கும் அவல நிலையில் தமிழர்கள்!

வடக்கில் தமிழர்களின் காணிகள் பலவற்றினை வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இது எதிர்காலத்தில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று பல புத்திஜீவிகள் தெரிவித்துள்ளார்கள்.

தமிழர்களின் பூர்வீக காணிகள் பல வெளியார்களுக்கு கைமாறுகின்றன வெளிமாகாண மக்கள் அந்த காணிகளில் தொழில் அமைப்புக்ககைள உருவாக்கி வெளிமாகாணமக்களை வேலைக்கு அமர்த்துக்கின்றார்கள்.
இது தொடர்பில் தமிழ்மக்கள் மத்தியில் போரிய விழிப்புணர்வு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்கள்.

மட்டக்களப்பில் தெற்கினை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களும் முஸ்லீம் இனத்தவர்களும் அதிகளவான தமிழர்களின் இடங்களை விலைக்கு வாங்கி உல்லாச விடுதிகள் அமைத்து செயற்படுகின்றார்கள் முஸ்லீம் மக்கள் அதிகளவில் குடியேற்றப்பட்டுள்ளார்கள் இவ்வாறு திருகோணமலை,முல்லைத்தீவு,வவுனியா,மன்னார்,யாழ்ப்பாணம்,கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவான பல ஆயிரம் ஏக்கர் வரையான தமிழர்களின் காணிகள் வெளி மாகாணங்களை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது இது தமிழர்களின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனையினை உண்டுபண்ணும் இதற்கு சரியான ஒரு தீர்வினை தமிழர்கள் எட்டவேண்டும்

குறிப்பாக வெளிநாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் தங்கள் சுகத்திற்காக தங்கள் சொந்த காணிகளை விற்பனை செய்கின்றார்கள் வடக்கு கிழக்கு பூர்வீக தமிழர் இல்லாத எவருக்கும் காணிகளை விற்பதால் பாரிய பிரச்சனை ஏற்படும் என்பதை தமிழர்களின் எதிர்காலத்தினை இலக்காக கொண்டு சிந்திக்கும் புத்திஜீவிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்

குறிப்பாக தற்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் எவ்வளவு விலைகொடுத்தாவது ஒரு துண்டு காணிவாங்கவேண்டும் என்ற முனைப்பில் தென்னிலங்கை சிங்களவர்கள் மற்றம் மலையக மக்கள் முஸ்லீம் இனத்தினை சார்ந்த பணப்புள்ளிகள் முன்டியடித்து கொண்டு நிற்பதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Updated: April 17, 2019 — 8:03 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *