முன்னாள் போராளியின் அவல நிலை…!

மட்டக்களப்பு மண்டூர் மாவட்டத்தினை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் முள்ளியவளை முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வந்த நிலையில் ஆடு மேய்க்க சென்ற வேளை மயக்கமடைந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பங்களிப்பு செய்த முன்னாள் போராளியாக மூன்று பிள்ளைகளின் தந்தையாக முள்ளியளை 01 ஆம் வட்டாரப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர் தன்னிடம் உள்ள ஆடுகளை வளர்த்து அதில் இருந்தான வருமானத்தினை கொண்டே தனது குடும்பத்தின் பொருளாதாரத்தினை கொண்டு நடத்தியுள்ளார்.
இன்னிலையில் நேற்று 17..04.19 அன்று உச்சி வெய்யிலில் ஆடுகளை மேயக்கட்டிவிட்டு ஆடுகளுக்கு இலைவெட்டிக்கொண்டு வரும்போது மயங்கி வீழ்ந்தவர் அதில் உயிரிழந்துள்ளார்.

செய்யமுடியாத நிலையில் இவரது குடும்பம் காணப்படுகின்றது அயலவர்களின் உறவினர்களின் உதவியுடன் இறுதி நிகழ்வினை நடத்த முன்வந்துள்ளபோதும் நாளை 19.04.19 அன்று இறுதி நிகழ்வு நடைபெறவுள்ளது உதவும் உள்ளம் படைத்தவர்கள் இந்த முன்னாள் போராளியின் குடும்பத்திற்கு உதவி புரியுமாறு வேண்டுவதுடன் இவ்வாறு பல முன்னாள் போராளிகள் வறுமையில் வாடிவருகின்றார்கள் அவர்களின் குடும்பங்கள் பல கவனிப்பார் அற்று காணப்படுகின்றது

தாயத்தில் உள்ள பல சமூக அமைப்புக்கள் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சமூக அமைப்புக்கள் ஊடாக இந்த முன்னாள் போராளியின் இறுதி நிகழ்விற்கு உதவிகள் புரிய புலம்பெயர் உறவுகளிடம் கோரிக்கை விடுகின்றார்கள்.

தொடர்புகளுக்கு 0768609054

Updated: April 18, 2019 — 9:55 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *