பூபதித் தாயின் 31 ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமையகத்தில்

அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலமையகத்தில் இன்று நடைபெற்றன.

நிகழ்வில் அன்னை பூபதியின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வலி தெற்கு பிரதேச சபை உறுப்பினர் முத்துலிங்கம் கஜேந்திரராசா , தமிழ் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Updated: April 19, 2019 — 7:30 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *