எட்டாவது முறையாக தெமடகொட பகுதியில் மீண்டும் குண்டுவெடிப்பு.!

இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெகிவலையில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

எட்டாவதாக தெமடகொட பகுதியில் மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது.

இந்நிலையில். கொச்சிகடை பகுதிக்கு  இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வந்திருக்கிறார்.  ”நாட்டின் பாதுகாப்பு குறைபாடு  தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தருணமிது” என ரணில் தெரிவித்திருக்கிறார்.

யாழ்பாணத்தில் உள்ள யாழ் புனித மரியன்னை உள்ளிட்ட தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

2:00 PM – குண்டுவெடிப்பில் காயமடைந்த சீன நாட்டவர்கள்

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில், பல சீன நாட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால், அவர்கள் தற்போது நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Updated: April 21, 2019 — 9:47 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *