எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு 215 பேர் பலி 450 வரையானவர்கள் காயம்!

ஸ்ரீலங்காவின் கொழும்பினை மையப்படுத்தியும் மற்றும் தமிழர் தாயகமான மட்டக்களப்பிலுமாக எட்டு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில்215 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 வரையானவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இவர்களில் 27 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள் ஸ்ரீலங்காவிற்கு சுற்றுலாசென்ற வெளிநாட்டவர்கள் நட்சத்திரவிடுகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்துள்ளார்கள்.

உயிரிழப்போரின் எண்ணிக்கைமேலும் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்,நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயம்,மட்டக்களப்பு சியோன் தேவாலயம் கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர கொட்டல்கள் மூன்று ஆகியவற்றிலும் தெகிவளை மிருககாட்சி சாலைக்கு அருகில் உள்ள மண்பத்திலும் தெமட்டக்கொடபகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் வெடிச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த சம்பத்தினை தொடர்ந்து பொலீஸ் ஊரடங்கு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற வெடிச்சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து சமூகவலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து மதவழிபாட்டுத்தலங்கள்,மற்றம் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் முப்படையினர் பாதுகாப்பில் நிறுத்தப்பட்டுள்ளதாக தாயத்தில் இருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Updated: April 21, 2019 — 4:01 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *