தொடர் குண்டு வெடிப்புகள் இடம்பெற்ற இடங்கள்.!

1. கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம்

2. நீர்கொழும்பு, கட்டான கட்டுவப்பிட்டிய தேவாலயம்

3.தென் தமிழீழம் , மட்டக்களப்பு, சியோன் தேவாலயம்

4. கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டல்

5. கொழும்பு, சங்கரில்ல ஹோட்டல்

6. கொழும்பு, சினமன் கிராண்ட்

7. கொழும்பு, தெஹிவளை ட்ரொபிகல் இன்

8. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -1

9. கொழும்பு, தெமட்டகொடை மகவில பூங்கா -2

இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட மேலும் ஆகிய இடங்களில் மேலும் இரு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.

இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 190 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொழும்புவின் தெமடகொட பகுதியில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, குண்டு வெடித்ததில் மூன்று காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.

தெமடகொடவில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து உடனடியாக  இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

Updated: April 21, 2019 — 4:02 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *