யாழ்.பல்கலைக்கழகம் இராணுவத்தால் சுற்றிவளைப்பு – மாணவர் ஒன்றிய தலைவர், செயலாளர் கைது..!

தமிழீழ விடுதலை புலிகளின் புகைப்படங்கள், தொலைக்காட்டிகள், சப்பாத்துக்கள் மீட்பு. யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள், தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்ட நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவார், மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவர் விடுதி ஆகியன இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவார் ஒன்றிய கட்டிடம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் விடுதி ஆகியன கடுமையான சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இந்நிலையில் மாணவர் ஒன்றிய கட்டிடம் மற்றும் மாணவர் விடுதி ஆகியவற்றுக்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் படங்கள் மற்றும் தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்து ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் கூறியுள்ளது. இதனடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் செயலாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்..

இராணுவத்தினர் பயன்படுத்தும் சப்பாத்து என குறிப்பிடும் காலணி பல்கலைக்கழக சுத்திகரிப்பு பணியாளர்கள் பயன்படுத்துவது என பல்கலை மாணவர்கள் தெரிவித்துள்ளனர்..

Updated: May 3, 2019 — 6:48 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *