நீர்கொழும்பில் சிங்கள முஸ்லீம் இனங்களுக்குகிடையில் மோதல் ஊடரடங்கு அமுல் !

நீர்கொழும்பு போராத்தோட்டையில் சிங்கள, முஸ்லிம் சமூகத்தினரிற்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது பல முச்சக்கர வண்டிகள் எரியூட்டபட்டுள்ளதாகவும் பொது சொத்துக்களுக்கு பல சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் தெனியாவத்த பகுதியில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல்களும் முஸ்லீம் மக்களின் வர்த்தகஸ்தளங்கள் மற்றும் வீடுகள் தாக்கப்பட்டுவருகின்றன. வீதியில் நின்ற முஸ்லீம் மக்களின் வாகனங்கள் தீவைத்து அடித்து நொருக்கப்படுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மேலதிக படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அந்த பகுதியில் காவல்துறை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது….

காலை 7 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்குமென பொலிசார் அறிவித்துள்ளனர்…. இலங்கையில் பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் முற்றாக முடக்கப்பட்டுள்ளன….

இருப்பவர்கள் இருந்திருந்தால் ஒரே நாளில் தீர்வு கிடைத்திருக்கும்.. காத்திருப்போம் காலம் பதில் சொல்லும்….

நீர்கொழும்பில் சிங்கள, முஸ்லீம் இனங்களுக்குகிடையில் கடும் கலவரம் !!

நீர்கொழும்பில் சிங்கள, முஸ்லீம் இனங்களுக்குகிடையில் கடும் கலவரம் !!

Gepostet von சின்னவன் – ஈழத்து பொடியன் am Sonntag, 5. Mai 2019

Updated: May 6, 2019 — 1:31 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *