கடும் சோதனைகளுடன் கல்விச் செயற்பாடுகள் ஆரம்பம் !!

ஸ்ரீலங்காவில் உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்ற குண்டுதாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மூடப்பட்ட பாடசாலைகளின் 5ம் தரத்துக்கு மேற்பட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டன.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டு நேற்றையதினம் அனைத்து பாடசாலைகளும் இராணுவம் மற்றும் பொலிசாரின் கடுமையான சோதனைகளுக்குள்ளாக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்றுகாலை பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் புத்தகப்பைகள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. பொலிசார்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால், புத்தகப்பைகள் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின்னரே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேவேளை ஆசிரியர்களின் வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் காலை பிரார்த்தனை வகுப்பறைகளுக்குள்ளேயே நடைபெற்றது.

அத்துடன், பாடசாலைகள் முன்பாக பொலிசாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated: May 6, 2019 — 9:04 am

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *