கரிகாலன் சேனை வரும்..காத்திரு.!

நாமழியப் பார்த்திருந்த நந்திக் கடலே !தமிழ்த் தாயழிய ஏன் சிரித்தாய் அன்று?
பேய்களுக்கு ஏன்அங்கே முந்தானை விரித்தாய்?

இன்தமிழை அழித்துமுன் வெறியடங்காமல்
இன்னும் ஏன் வீறுகொண்டு அடிக்கின்றாய்?..
தேமதுரத் தமிழோசை தினமொலித்த எம்மண்ணை
‘நமோ நமோ’ மாதாவென்று ஏன் தொழநீ வைத்தாய்?..

முள்ளி வாய்க்காலில் கொள்ளி வைத்துமுன்
துள்ளியடிக்கும் வெறியடங்க வில்லையா..?
புள்ளிப் புலிகளின் புறமதன் சிறப்பை
போர்முனையில் பார்த்திருந்த நந்திக் கடலே.!. பதில் சொல்லு..!

ஆனந்த புரத்தில் விழவிழ எழுந்தோம் ஏன்அதை மறந்தாய்..?
ஆருயிர்த் தலைவனை ஆயிரம் உயிரினை கொடுத்துக் காத்தோம்.. அறிந்தவள் நீயல்லவா? ஏனிந்த போரென்று
உனக்கின்னும் புரியல்லையா ?

அகிலத்து நாடுகள் சூழ்ந்திட வந்ததேன் ஆண்மையில்லா(த) சிங்(கள)
வாலா? நேருக்கு நேரங்கே மோதிடத் துணிவின்றி
போரியல் மரபினை மீறியதேன் ?

முதுகுத் தண்டில்லா மூடா !
முன்னொருநாள் கைமுனுவும் உனைப்போல்தான்…. எம்மவனாம் எல்லாளன் வீரம்முன் தொடைநடுங்கி வஞ்சனையால் பின்முதுகில் குத்தியவன்.. என்பதைநீ அறியாயோ..?

‘பொஸ்பரசை’ கொண்டுவந்து போட்டெம்மை அழிப்பதுதான் சிங்களத்து மண்தந்த.. செம்மல்களுக்கு அழகா ?
கொத்துக் கொத்தாய் குண்டுகளை கொண்டுவந்து
கொத்துமலர் போல் நின்ற மக்கள்மேல் கொட்டியது …
கோதபயா என்னும் காதகன் படித்த போர்க்கலையா?

போர்க்கலையின் வரைமுறையை படித்தவர்கள் புலிகள்..! வேர்க்கடலை விற்றுவிட்டு வந்தவர்கள் அல்ல…!
ஆர்ப்பரிக்கும் கடல்கூட அடிபணியும் புலிமீண்டும் எழுந்தால் .. அறிந்துகொள்..! அழிக்க நாம் நினைத்தால்..கண்டி..
அனுராதபுரம் காலி கொழும்பு.. வரை படத்தில் இருக்காது தெரிந்துகொள்!

நரித்தனமும் கொலைவெறியும் புரிந்தெம்மை அழித்தாய்
நாசமுறு யுத்தத்தை நம்பியே களம் நின்றாய்.!.எமை வென்றாய்!
வேறென்ன அங்கே நீ புரிந்தாய்? வீரமா..?
அடமூடா.. அதற்கும் உனக்கும் என்ன தொடர்பு?- ஒரு கில்லோ எத்தனை ரூபாய் என்று சொல்லு? பார்ப்போம்!

இனித்தமிழன் போரங்கே இராணுவத்தை மட்டும் அழிப்பதல்ல.. உன்னினமே அங்கு புல்லோடும் பூண்டோடும் பொசுங்கிச் சாகும்வரை புலித்தமிழன் கண்கள் உறங்காது.. காயம் பட்டபுலி காத்திருக்கும் எனும் உண்மையைப் புரிந்துகொள்.! இல்லையென்றால் என் பேரன்
வந்தழிப்பான் கவனம் ! சொல்லிவை உன் பரம்பரைக்கு!

மடையா..! மரித்தவர்கள்..மீண்டும் சிலுவை சுமந்து
மறத்தமிழர் வீரம் காக்க வருவர் ..
பிறக்கும்.. புதுக்குழந்தை ஒவ்வொன்றிலும் புது இரத்தம் பாய்ச்சி
புலிவீரர் புறப்பட்டு வருவர்.. பொறுத்திரு நீ!

வரிப்புலியை அழிக்க வகை அறியாமல் ஆரியராம் வடவர்.. விரித்தவலை மீது விழுந்தவனே ராஜபக்சா..!
கரிகாலன் சேனை கடுகென்று எண்ணாதே
குடகு மலைக் காவிரிபோல் பொங்கிவரும் பொறுத்திரு!

Updated: May 6, 2019 — 2:30 pm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *